Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.18,999 போதும்.. 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 7300mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் விவோ டி4 5ஜி (Vivo T4 5G) போன் வெளியாகி இருக்கிறது. இந்த போனின் வெளியீட்டை தொடர்ந்து சத்தமே இல்லாமல் விவோ டி3 5ஜி (Vivo T3 5G) போனுக்கு ரூ.4,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதுவரையில் கிடைக்காத கம்மி பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பேங்க் டிஸ்கவுண்ட் போக விலை குறைப்பும் இருப்பதால், கஸ்டமர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கிறது. விவரம் இதோ.

இந்த விவோ டி3 5ஜி போன் வெளியானபோது அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருந்தது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.22,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.2,000 நேரடி விலை குறைப்பு வருகிறது. இதுபோக எஸ்பிஐ, எச்டிஎப்சி கார்டுகளுக்கு ரூ.4,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.18,999 போதும்.. 3D டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஆகவே, விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.18,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கும் விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.26,999 மார்கெட் விலை கொண்ட அந்த மாடலை ரூ.2,000 விலை குறைப்பு மற்றும் ரூ.4,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக வாங்கலாம்.

விவோ டி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T3 Pro 5G Specifications): இந்த விவோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) மற்றும் ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 7 Gen 3) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) வரையில் அப்டேட் கொடுக்கப்படுகிறது.

4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 387 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா (ஓஐஎஸ் டெக்னாலஜி + சோனி ஐஎம்எக்ஸ்822 சென்சார்) மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் வருகிறது. இந்த பீச்சர்களுடன் இப்போது அதிகப்படியான பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் விலை குறைப்பில் கிடைக்கிறது. இப்போது, வெளியான விவோ டி4 5ஜி போனின் முக்கிய பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.

விவோ நிறுவனத்தின் டி சீரிஸ் போன்களில் எப்போதும் பேட்டரி கேபாசிட்டி அதிகமாகவே இருக்கும். ஆகவே, இந்த விவோ டி4 5ஜி போனில் 7300mAh பேட்டரி மட்டுமல்லாமல் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்தியாவில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட விவோ மாடலாக இந்த போன் இருக்கிறது. மற்ற பீச்சர்கள் வழக்கமாகவே இருக்கின்றன.

6.77 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், ஃபன்டச்ஓஎஸ் 15, ஸ்னாப்டிராகன் 7எஸ் 3 4என்எம் சிப்செட் உள்ளது. 50 எம்பி மெயின் + 2 எம்பி டெப்த் மற்றும் 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. கூடுதலாக IP65 ரேட்டிங் மற்றும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது.

Best Mobiles in India

English summary
23 Percent Discount on Vivo T3 Pro 5G With 8GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X