Home
Mobile

அதிரடி காட்டும் பிளிப்கார்ட்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் ((Samsung Galaxy M15 5G Prime Edition) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 6000mAh பேட்டரி, 50எம்பி கேமரா, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் மாடலுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ,12,965 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ,1750 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.11215 விலையில் இந்த போனை வாங்கவிட முடியும்.

அதிரடி காட்டும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் அம்சங்கள் (Samsung Galaxy M15 5G Prime Edition Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமைன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். குறிப்பாக இந்த மீடியாடெக் டைமைன்சிட்டி சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

அதேபோல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) வசதியுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜிபிரைம் எடிஷன் மாடல். மேலும் 1080 x 2340 பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் 50 எம்பி பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 2 எம்பி மேக்ரோ சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ரியர் கேமராக்கள் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (10x Digital Zoom), ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இதில் உள்ளன.பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது.அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி காட்டும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

6000mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) உள்ளது. குறிப்பாக இதன் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
23 Percent Discount on Samsung Galaxy M15 5G Prime Edition With 50MP Camera in Flipkart Sale specs price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X