சரசரன்னு குறைந்த ரெட்மி 5ஜி போன் விலை.. சோனி கேமரா.. 45W சார்ஜிங்.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?
விவோ, ஒப்போ, மோட்டோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது அசத்தலான ஸமார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது ரெட்மி நிறுவனம். அதுவும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) போன் தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது அமேசான் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.15,000 விலையில் வாங்கிவிட முடியும்.

ரெட்மி நோட் 14 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 5G specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா (Octa Core 6nm MediaTek Dimensity 7025 Ultra) சிப்செட் உடன் இந்த ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 2 ஓஎஸ் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்.
அதேபோல் 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 × 2400 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ மேஜிக் ஸ்கை (AI Magic Sky) மற்றும் ஏஐ ஆல்பம் (AI Album) போன்ற பீச்சர்களை கொடுக்கும்
சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) சப்போர்ட் இந்த போனில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா-வைடு + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி (சோனி எல்ஒய்டி 600 சென்சார்) கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த ரெட்மி போன் வெளிவந்தது. குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
இந்த ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் 5110mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது . எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








