Home
Mobile

முடிச்சு விட்டீங்க போங்க.. ரூ.8299 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. ஆஃபரில் Redmi 5ஜி போன்..

அமேசான் சிறப்பு விற்பனையில் ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது ரெட்மி ஏ4 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது அமேசான் தளத்தில் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 23 சதவீதம் வழங்கப்பட்டு ரூ.8499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் 200 வரை கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது. எனவே இந்த போனை ரூ.8299 விலையில் வாங்கிவிட முடியும்.

முடிச்சு விட்டீங்க போங்க.. ஆஃபரில் Redmi 5ஜி போன்..

ரெட்மி ஏ4 5ஜி அம்சங்கள் (Redmi A4 5G Specifications): தரமான ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 (Snapdragon 4s Gen 2) சிப்செட் உடன் இந்த ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் Xiaomi HyperOS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதி இந்த போனில் உள்ளது. மேலும் அட்ரினோ 611 ஜிபியு (Adreno 611 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த புதிய போன்.

6.88 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஏ4 5ஜி. மேலும் 1600 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், போன்ற பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் . செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

4ஜிபி ரேம் + 64பி மெமரி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5160mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ரெட்மி ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), எப்எம் ரேடியோ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனில் ஜியோ 5ஜி ஆதரவு மட்டுமே உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
23 Percent Discount on Redmi A4 5G With 4GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X