தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.12999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 12GB ரேம்.. 50MP கேமரா.. 2TB மெமரி.. எந்த போன்?
ரியல்மி நிறுவனத்தின் 7ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ரியல்மி பி3 சீரிஸ் (Realme P3 Series) மாடல்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி வீகன் லெதர் பேனல் மட்டுமல்லாமல், டைமன்சிட்டி 6400 சிப்செட், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3x 5G) போன் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பட்டையை கிளப்புகிறது. இந்த மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை பார்க்கலாம்.
பிரீமியம் வீகன் லெதர் டிசைனில் குவாலிட்டி லுக் கொடுக்கிறது. 7.94 எம்எம் தடிமனில் ஸ்லிம் லுக் கிடைக்கிறது. இதுபோக ஆர்மர்ஷெல் கிளாஸ் (Armorshell Glass) டிஸ்பிளே பாதுகாப்பு, மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் மற்றும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் டாப்-டயர் வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆகவே, டிசைன் மற்றும் பில்ட் குவாலிட்டி பக்காவாக இருக்கிறது.

6 ஜிபி ரேம் + 6 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.13,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 10 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.14,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது, ரூ.1000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கிரெடிட்/டெபிட் கார்டுகள் தேவையில்லை.
ஆகவே, நேரடி விலை குறைப்பு போக ரூ.12,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல 8 ஜிபி ரேம் மாடலுக்கும் ரூ.1000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரியல்மி நிறுவனத்தின் 7ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு இந்த விலை குறைப்பு கிடைக்கிறது. இதேபோல பி3 சீரிஸ் மாடல்களுக்கும் விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் இந்த விலை குறைப்பு போக ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போனில் மிட்நைட் ப்ளூ (Midnight Blue) கலர் கிடைக்கிறது. இதில் வீகன் லெதர் பேனல் டிசைன் வருகிறது. மேலும், லூனார் சில்வர் (Lunar Silver) மற்றும் ஸ்டெல்லர் பிங்க் (Steller Pink) ஆகிய கலர்களிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ரியல்மி பி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P3x 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் மற்றும் ஏஐ கேமரா பீச்சர்களை கொடுக்கும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் வாட்டர் டச் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போனில் 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது.
50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட், டூயல் ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் உள்ளது. வீகன் லெதர் பேனல் கொண்ட போனை கம்மியான பட்ஜெட்டில் வாங்க வேண்டுமானால், இந்த பி3எக்ஸ் 5ஜி போனை ஆப்ஷனில் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








