Home
Mobile

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் டைமன்சிட்டி சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி பி1 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைச் சற்று விரவாகப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும். எனவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி பி1 5ஜி அம்சங்கள் (Realme P1 5G specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி பி1 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ், TuV Rheinlandப்ளூ-லைட் ஃபில்டர் பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 chipset) வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் விசி கூலிங் சிஸ்டம் (VC cooling system) வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி1 5ஜி போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System)கொண்டுள்ளது ரியல்மி பி1 5ஜி போன். நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode) போன்ற அம்சங்களும் இந்த கேமராவில் உள்ளன.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் டூயல் வியூ-வீடியோ (Dual-view Video), ஃபிலிம் மோட் (Film Mode), டில்ட் ஸ்விப்ட் (Tift Shift) போன்ற அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த போன்.பீனிக்ஸ் ரெட் (Phoenix Red) மற்றும் பீகாக் கிரீன் (Peacock Green) கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.

5000mAh வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஐபி54 ரேட்டிங், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
23 Percent Discount on realme P1 5G With 50MP camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X