அசூர விற்பனை.. ரூ.15,000 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
நம்ப முடியாத பட்ஜெட்டில் அல்ட்ரா பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம், விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொண்ட 6 ஜிபி ரேம், 45W சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ரியல்மி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.
ரியல்மி பி1 5ஜி அம்சங்கள் (Realme P1 5G Specifications): இந்த ரியல்மியில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பி&டபிள்யூ கேமரா (B&W Camera) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. மெயின் கேமராவில் நைட் மோட் (Night Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

மேலும், டூயல் வியூ-வீடியோ (Dual-view Video), ஃபிலிம் மோட் (Film Mode), டில்ட் ஸ்விப்ட் (Tift Shift) போன்ற பீச்சர்களும் இருக்கின்றன. 16 எம்பி செல்பீ ஷூட்டரில் நைட் மோட், போர்ட்ராய்டு மோட் பீச்சர்கள் வருகின்றன. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. 6 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) உள்ளது.
மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டிலும் 8 ஜிபிக்கா டைனாமிக் ரேம் சப்போர்ட் வருகிறது. டைனாமிக் ரேம் மட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொண்டிருக்கிறது. 6.7 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) டிஸ்பிளே உள்ளது.
இதுவொரு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே மாடாலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) சப்போர்ட் உள்ளது. ஆகவே, டிஸ்பிளேவில் பிரீமியம் அவுட்புட் கிடைக்கும்.

இந்த ரியல்மி பி1 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் வருகிறது. அதேபோல ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) மற்றும் மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
45W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் மற்றும் டைப்-சி சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. IP54 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. இந்த பட்ஜெட்டிலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் In-display Fingerprint Scanner) வருகிறது. அதேபோல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது.
இப்போது, ரூ.800 உடனடி டிஸ்கவுண்ட் உடன் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனையாகிறது. இந்த டிஸ்கவுண்ட்டை பெற பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். ஆகவே, இந்த போனை ரூ.15,199 பட்ஜெட்டில் வாங்கலாம். பீனிக்ஸ் ரெட் (Phoenix Red) மற்றும் பீகாக் கிரீன் (Peacock Green) கலர்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications








