Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. வெறும் ரூ.8499 போதும். 108MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி டேஸ் (Realme Days) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் ஜனவரி 4-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் 108எம்பி கேமரா கொண்ட ரியல்மி சி53 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி சி53 ஸ்மார்ட்போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.9,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. வெறும் ரூ.8499 போதும்.. எந்த போன்?

எனவே இந்த ரியல்மி சி53 ஸ்மார்ட்போனை ரூ.8,499 விலையில் வாங்கிவிட முடியும். மேலும் இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி சி53 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி சி53 அம்சங்கள் (Realme C53 Specifications): 6.74 எச்டி பிளஸ் இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது ரியல்மி சி53. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 560 பீக் பிரைட்னஸ் வருகிறது. குறிப்பாகப் பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

ஆக்டா கோர் யுனிசோக் டி612(Octa-Core UNISOC T612) சிப்செட் கொண்டு இந்த ரியல்மி சி53 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் ( (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ டி எடிஷன் ஓஎஸ் (Realme UI T Edition OS) மூலம் இந்த போன் இயங்குகிறது.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி சி53 மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வரும் டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி சி53 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்து. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது.

இததுவிர டைம் லேப்ஸ், போர்ட்ராய்ட் மோட், எச்டிஆர் மோட், ஏஐ சீன் ரெககனைசேஷன், ஸ்லோவ் மோஷன், போக்கே எஃபெக்ட் கன்ட்ரோல், 3எக்ஸ் ஜூமிங் சென்சார் போன்ற கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி சி53 ஸ்மார்ட்போன்.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. வெறும் ரூ.8499 போதும்.. எந்த போன்?

18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி சி53 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர், டூயல் 4ஜி சிம் சப்போர்ட், ப்ளூடூத் 5, டைப் - சி போர்ட் உள்ளிட் கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

108எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, பெரிய டிஸ்பிளே மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
23 percent discount on realme C53 smartphone on Flipkart: check details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X