Home
Mobile

இதுதான் ஆஃபர்.. வெறும் ரூ.9,999 போதும்..108MP கேமரா, 6.7-இன்ச் டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது mobile bonanza sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 108எம்பி கேமரா கொண்ட ரியல்மி போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி சி53 ஸ்மார்ட்போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரியல்மி சி53 ஸ்மார்ட்போனை ரூ.9,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. எனவே 108எம்பி ரியர் கேமரா கொண்ட இந்த ரியல்மி சி53 போனை மலிவு விலையில் வாங்கலாம்.

இதுதான் ஆஃபர்.. வெறும் ரூ.9,999 போதும்.. 108MP கேமரா.. எந்த போன்?

ரியல்மி சி53 அம்சங்கள்(Realme C53 Specifications): 6.74 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது ரியல்மி சி53 ஸ்மார்ட்போன். பின்பு 1600 x 720 பிக்சல்ஸ்,90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 560 பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குறிப்பாகப் பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது, அதேபோல் இந்த டிஸ்பிளேவில் எச்டி பிளஸ் ஆதரவு உள்ளது. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். மேலும் ஆக்டோ-கோர் யுனிசோக் டி612 (Octa-Core UNISOC T612)சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன்.

மேலும் மாலி - ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் (Android 13 OS) மூலம் இந்த ரியல்மி போன் இயங்குகிறது. அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று ரியல்மி நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ரியல்மி சி53 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளது.

இதுதான் ஆஃபர்.. வெறும் ரூ.9,999 போதும்.. 108MP கேமரா.. எந்த போன்?

இதுதவிர டைம் லேப்ஸ், போர்ட்ராய்ட் மோட், எச்டிஆர் மோட், ஏஐ சீன் ரெககனைசேஷன், ஸ்லோவ் மோஷன், போக்கே எஃபெக்ட் கன்ட்ரோல், 3எக்ஸ் ஜூமிங் சென்சார் போன்ற கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் வசதிகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி போன்.

18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி சி53 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு டூயல் 4ஜி சிம் சப்போர்ட், ப்ளூடூத் 5, டைப் - சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக 108எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, தரமான சிப்செட், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
23 percent discount on Realme C53 phone on Flipkart: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X