போடு ஆர்டர்.. ரூ.3500 விலை குறைப்பு.. பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் மெயின் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட், 8 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொண்ட ரியல்மி 13 பிளஸ் (Realme 13 Plus) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
இந்த ரியல்மி போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆனால், அமேசான் தளத்தில் வெறும் ரூ.21,498 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் ரூ.3,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் பெடரல் பேங்க் டெபிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,998 பட்ஜெட்டில் வாங்கலாம்.

மேலும், பெடரல் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், ரூ.3,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதேபோல பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டுக்கு ரூ.3,500 டிஸ்கவுண்ட் மற்றும் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.3,750 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.20,423 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கொடுக்கப்படுகிறது.
ரியல்மி 13 பிளஸ் அம்சங்கள் (Realme 13 Plus Specifications): இந்த ரியல்மியில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரில்மி யுஐ 5 (realme UI 5) மற்றும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. லாக் ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி (Octa Core 4nm MediaTek Dimensity 7300 Energy) சிப்செட் உள்ளது.
பாண்டா கிளாஸ் (Panda Glass) பாதுகாப்பு மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) சப்போர்ட் கொண்ட 6.67 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
இந்த ரியல்மி 13 பிளஸ் போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்கிறது. ரூ.20000 பட்ஜெட் செக்மெண்ட்டில் பழகிவிட்ட சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்ட டூயல் ரியர் செட்டப் உள்ளது.
இந்த கேமராவில் லைட்ப்யூஷன் என்ஜின் (LightFusion Engine), எச்டிஆர் என்ஜின் (HDR Engine), சூப்பர்ஓஐஎஸ் (SuperOIS) போன்ற பிரத்யேக கேமரா பீச்சர்களுடன் 4K வீடியோ ரெக்கார்டிங், ஈஐஎஸ் (EIS) மற்றும் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த 13 பிளஸ் போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), IP65 ரெசிஸ்டன்ட் உள்ளது.
இந்த பட்ஜெட்டிலும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. வேப்பர் கூலிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. டூயல் 5ஜி (Dual 5G) கனெக்டிவிட்டி, ஃபிளிக்கர் சென்சார், மேக்னட்டிக் இன்டக்சன் சென்சார், இன்-டிஸ்பிளே சென்சார் இருக்கிறது. விக்டரி கோல்டு (Victory Gold), ஸ்பீடு கிரீன் (Speed Green) மற்றும் டார்க் பர்பிள் (Dark Purple) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








