Home
Mobile

அடிச்சு புடிச்சு ஆர்டர்.. ரூ.17000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 2TB மெமரி.. 16GB ரேம்.. 67W சார்ஜிங்.. எந்த போன்?

108 எம்பி கேமரா, 2டிபி மெமரி சப்போர்ட், 16ஜிபி ரேம், ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 67W சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்ட போன் பட்ஜெட்டில் வேண்டுமானால், அமேசான் (Amazon) தள்ளுபடியில் கிடைக்கும் ரியல்மி 11 5ஜி (Realme 11 5G) போனை வாங்கலாம்.

ரியல்மி 11 5ஜி அம்சங்கள் (Realme 11 5G Specifications): இந்த ரியல்மி போனில் 6.72 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz டைனாமிக் ரெஃப்ரெஷ் ரேட் (Dynamic Refresh Rate) மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) வருகிறது.

பட்ஜெட்ல 108MP கேமரா.. 2TB மெமரி.. 16GB ரேம்.. 67W சார்ஜிங் போன்!

அதுமட்டுமல்லாமல், 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது. 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. அதேபோல 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மட்டுமல்லாமல், எஸ்டி கார்டு சிலாட்டும் (SD Card Slot) இடம் பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ரியல்மி யுஐ 4.0 (UI 4.0 OS) ஓஎஸ் வருகிறது.

இந்த ரியல்மி 11 5ஜி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் இருக்கிறது. சாம்சங் ஐசோசெல் எச்எம்6 (Samsung ISOCELL HM6) சென்சாருடன் 108 எம்பி ரியர் கேமரா (Rear Camera) வருகிறது. 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) வருகிறது.

பட்ஜெட்ல 108MP கேமரா.. 2TB மெமரி.. 16GB ரேம்.. 67W சார்ஜிங் போன்!

இந்த ரியர் கேமராவில் 3எக்ஸ் லாஸ்லெஸ் ஜூமிங் (3x Lossless Zoom) சப்போர்ட் வருகிறது. 16 எம்பி செல்பீ வருகிறது. இந்த ரியல்மி 5ஜி வேரியண்ட்டில் 5000mAh பேட்டரியானது, 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SperVOOC Fast Charging) சப்போர்ட்டுடன் வருகிறது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 7.89 எம்எம் தடிமன் மற்றும் 190 கிராம் எடை கொண்டிருக்கிறது. 5ஜி, டூயல் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

ரியல்மி 11 5ஜி விலை (Realme 11 5G Price): இந்த ரியல்மி 11 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 18,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும் இருக்கிறது. குளோரி பிளாக் (Glory Black) மற்றும் குளோரி கோல்டு (Glory Gold) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதில் குளோரி பிளாக் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டானது, அமேசான் (Amazon) தளத்தில் தள்ளுபடி விலையில் வெறும் ரூ.17,640 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அதோடு ரூ.16,750 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. பட்ஜெட்டில் 108 எம்பி கேமரா போன் வேண்டுமானால், இந்த மாடல் ஆப்ஷனில் வைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
23 Percent Discount on Realme 11 5G With 108MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X