ஆஃபரே மிரண்டுடுச்சு.. ரூ.18999 போதும்.. 108MP கேமரா.. 11GB ரேம்.. 67W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?
108எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட், 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்கா பிரீமியம் அம்சங்களுடன் வெளியான போக்கோ எக்ஸ் 5 ப்ரோ (POCO X5 Pro) போன் பிளிப்கார்ட் (Flipkart) தள்ளுபடியில் வெறும் ரூ.18,999க்கு கிடைக்கிறது.
போக்கோ எக்ஸ் 5 ப்ரோ அம்சங்கள் (POCO X5 Pro Specifications): இந்த போக்கோ போன் டிஸ்பிளேவில் பின்னிப்பெடல் எடுக்கும் அம்சங்களை கொண்டுள்ளது. இதில் 6.67 இன்ச் (1080×2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் ( FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 30 / 60 / 90 / 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1920Hz ஹை - ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (High Frequency PWM Dimming), டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut), 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படி டிஸ்பிளே அம்சங்களே மிகவும் பிரீமியமாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போக்கோ போனில் ஆண்ட்ராய்டு 12 (Android 12) மற்றும் எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி 6என்எம் (Octa Core Snapdragon 778G 6nm) சிப்செட் வருகிறது.
அதோடு அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த போக்கோ எக்ஸ்5 ப்ரோ போன் 2 மெமரி வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதாவது, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என்று 2 வேரியண்ட்கள் உள்ளன. அதோடு 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது.
டூயல் நானோ சிம் சிலாட் வருகிறது. இந்த போனில் மற்றொரு பிரம்மாண்ட அம்சமாக டிரிபிள் ரியர் கேமரா செட்டப் இருக்கிறது. 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா+ 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் சாம்சங் ஐசோசெல் (Samsung ISOCELL) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளதால், போட்டோ குவாலிட்டி கிரிஸ்டல் கிளியர் தரத்தில் இருக்கும்.
இந்த போனில் சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது. IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), சூப்பர் லைனர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Super-linear stereo speakers), டால்பி அட்மோஸ் சப்போர்ட் (Dolby Atmos) ஆகிய அம்சங்கள் வருகின்றன. அதோடு ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) மற்றும் வை-பை 802 (Wi-Fi 6 802) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
அதோடு டூயல் 4ஜி வோஎல்இடி (Dual 4G VoLTE) சப்போர்ட் உள்ளது. இந்த போன், போக்கோ யெல்லோ (POCO Yellow), ஹரிசோன் ப்ளூ (Horizon Blue) மற்றும் ஏஸ்ட்ரல் பிளாக் (Astral Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,999ஆக இருந்தது.
அதன்பின்பு இந்த மாடலின் விலை ரூ.19,999ஆக குறைக்கப்பட்டது. இப்போது, இந்த விலையிலும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அதிரடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த போனை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.1000 கேஷ் பேக் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், ரூ.18,150 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.18,999க்கு வாங்கிக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








