அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.19000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்தியாவில் பட்ஜெட்டில் வெளியாகிய ஓப்போ கே14 5ஜி (OPPO K14 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. பெரிய பேட்டரி மற்றும் ஸ்மூத் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஓப்போ ஸ்மார்ட்போன் பட்ஜெட்டில் கிடைப்பதால், விற்பனை சூடுபிடித்துள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
23 சதவீத தள்ளுபடி விலைக்கு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ.19,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தகுதி வாய்ந்த கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.800 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.19,199 விலையில் வாங்கி கொள்ளலாம். ப்ரிசம் ஒயிட், ப்ரிசம் வயலெட் மற்றும் ஐசி ப்ளூ கலர்களில் கிடைக்கிறது.

ஓப்போ கே14 5ஜி அம்சங்கள் (OPPO K14 5G Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட 6.75 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே, 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் டிசிஐ பி3 (DCI P3) கலர் டெப்த் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. பிரீமியம் டியூரபிலிட்டி மாடலாக இருக்கிறது.
IP69 ரேட்டிங், IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்துள்ளது. இதுபோக ஒட்டுமொத்த பாடிக்கு மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கிடைக்கிறது. 3900 எம்எம் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த பேட்டரிக்கு 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ரிவர்ஸ்டு வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. எப்/1.8 அபெர்சருடன் 50 எம்பி பிரைமரி கேமரா + எப்/2.4 அபெர்சருடன் 2 எம்பி மோனோகுரோம் கேமராவை இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆட்டோ போகஸ் (Auto Focus) கொடுக்கப்பட்டு உள்ளது.
10x டிஜிட்டல் ஜூமிங் உள்ளது. மேலும், 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங், டூயல் வியூ-வீடியோ ஷூட்டிங் செய்து கொள்ளலாம். போர்ட்ராய்டு, நைட் உள்ளிட்ட ஓப்போவில் வழக்கமாக கிடைக்கும் பீச்சர்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐகேம் பூஸ்ட் 2.0 (AI GameBoost 2.0), ஏஐ லிங்க்பூஸ்ட் 3.0 (AI LinkBoost 3.0) கிடைக்கிறது.
மேலும், சைடு பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side fingerprint sensor), ஆம்பியன் லைட் சென்சார் (Ambient Light Sensor) உள்ளது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), அல்ட்ரா வால்யூம் மோட் (Ultra Volume Mode) கிடைக்கிறது. க்ளோவ் டச், அவுட்டோர் மோட் 2.0 கிடைக்கிறது. அண்டர் வாட்டர் போட்டோகிராபி மோட் உள்ளது. ஏஐ நைட் மோட் (AI Night Mode) உள்ளது.


Click it and Unblock the Notifications