பொளந்து கட்டுது டிஸ்கவுண்ட்.. 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா OPPO 5G ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
ஓப்போ (OPPO) நிறுவனத்தின் பெரிய பேட்டரி கொண்ட மாடலாக களமிறங்கிய ஓப்போ கே14 5ஜி (OPPO K14 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிளிப்கார்ட் தளத்தில் இப்போது அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது. 45W சார்ஜிங், 50 எம்பி கேமரா உள்ளிட்ட பீச்சர்களுடன் கிடைக்கிறது.
23 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.19,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடியும் போக ரூ.18,999 விலைக்கு இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஐ ஆப்ஷனுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது.

ஓப்போ கே14 5ஜி அம்சங்கள் (OPPO K14 5G Specifications): 6.75 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், பட்ஜெட் மாடல்களை போல 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆகவே, டிஸ்பிளேவில் பெரிதாக அவுட்புட் எதிர்பார்க்க முடியாது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும். ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் பேக் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைத்துள்ளது.
மேலும், கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்கிறது. ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ ரீகம்போஸ் (AI Recompose), ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் (AI Clarity Enhancer) போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஏஐ கேம்பூஸ்ட் 2.0 (AI GameBoost 2.0) மற்றும் ஏஐ லிங்பூஸ்ட் 3.0 (AI LinkBoost 3.0) போன்ற பீச்சர்களையும் இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டுயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி கேமராவை பேக் செய்துள்ளது. ரியர் மற்றும் செல்பீ கேமராக்களில் 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனின் ஹைலைட் பீச்சராக பேட்டரி சிஸ்டம் இருக்கிறது. ஏனென்றால், 7000mAh பேட்டரி கேபாசிட்டியை கொடுத்து இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெரிய பேட்டரி கிடைப்பதால், 8.61 எம்எம் தடிமன் கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே14 5ஜி இருக்கிறது.
மேலும், 212 கிராம் எடை கொண்டிருக்கிறது. 3900 எம்எம் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கிடைக்கிறது. அண்டர் வாட்டர் போட்டோகிராபி மற்றும் வீடியோ கிராபி கொடுக்கும்படி IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. 3 கலர்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.
ஆகவே, ப்ரிசம் ஒயிட் ( Prism White), ப்ரிசம் வயலெட் (Prism Violet) மற்றும் ஐசி ப்ளூ (Icy Blue) கலர்களில் வாங்கி கொள்ளலாம். சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 ஏசி கிடைக்கிறது. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகளை கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications