யாரு சாமி அவன்.. வெறும் ரூ.10999 பட்ஜெட்ல 12GB ரேம்.. 5100mAh பேட்டரி.. 45W சூப்பர்வூக் சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் ஓப்போ கே12எக்ஸ் 5ஜி (OPPO K12x 5G) போன் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம், 5100mAh பேட்டரி, 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், பாண்டா கிளாஸ் புரொடெக்சன் டிஸ்பிளே போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களை கொண்டிருக்கிறது. இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனுக்கு கிடைத்துள்ள டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.1,750 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் போக ரூ.9,250 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.11,249 விலையில் வாங்கி கொள்ளலாம்.

ஓப்போ கே12எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K12x 5G Specifications): இந்த ஓப்போ போனில் டிரினிட்டி என்ஜின் (Trity Engine) சப்போர்ட் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. மேலும், கலர் ஓஎஸ்14 (ColorOS 14), மாலி ஜி57 (Mali G57) கிராபிக்ஸ் உள்ளது.
ஆகவே, பர்ஃபாமென்ஸ் பட்ஜெட்டைவிட கூடுதலாக கிடைக்கும். ஏனென்றால், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலில் 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த 2 ரேம் மாடல்களிலும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது.
இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனின் டிஸ்பிளேவை பார்க்கையில் 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட ஐ கம்போர்ட் டிஸ்பிளே (Eye Comport Display) மாடலாகும். இதுபோக பாண்டா கிளாஸ் (Panda Glass) புரொடெக்சன் கொண்டிருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் இருக்கிறது. 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

கேமராவில் பட்ஜெட்டிலும் மிரள விட்டுள்ளது. ஆகவே, கேலக்ஸிகோர் சென்சார்களுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) பேக் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸிகோர் ஜிசி32ஈ2 (GalaxyCore GC32E2) சென்சாருடன் 32 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. அதேபோல கேலக்ஸிகோர் ஜிசி02எம்1பி (GalaxyCore GC02M1B) சென்சாருடன் 2 எம்பி டெப்த் கேமரா உள்ளது.
மெயின் கேமராவில் ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching) பீச்சர்கள் கிடைக்கின்றன. செல்பீ கேமராவிலும் மிட்-ரேஞ்ச் சென்சார் உள்ளது. ஆகவே, ஜிசி08ஏ8-டபுள்யூஏ1எக்ஸ்ஏ (GC08A8-WA1XA) சென்சாருடன் 8 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டிலும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கிடைக்கிறது.
கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப 5100mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியுடன் 7.68 தடிமன் மட்டுமே இருக்கிறது. ஆகவே, ஸ்லிம் லுக் மாடலாக இது இருக்கும். அதேபோல 186 கிராம் எடை மட்டுமே இருக்கிறது. லைட் வெயிட் ஹேண்டில் எதிர்பார்க்கலாம். எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிஃபைடு மிலிட்டரி-கிரேடு டியூரபிலிட்டி (Military-grade Durability) கிடைக்கிறது.
ஆகவே, பில்ட் குவாலிட்டி பக்கா பிரீமியமாக எதிர்பார்க்கலாம். மேலும், இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனுக்கு IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. பிரீஸ் ப்ளூ (Breeze Blue) மற்றும் மிட்நைட் வயலெட் (Midnight Violet) ஆகிய 2 கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதுவொரு 5 மாடல் என்பதால், 5ஜி என்ஏ/என்எஸ்ஏ (5G NA/NSA) கனெக்டிவிட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications








