பொசுக்குன்னு ஆஃபர் போட்ட பிளிப்கார்ட்.. 5100mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. மலிவு விலையில் Oppo 5ஜி போன்..
பிளிப்கார்ட் தளத்தில் தரமான ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (OPPO K12x 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங், டைமன்சிட்டி சிப்செட், டூயல் கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ கே12எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.11,999 இருந்தால் போதும் இந்த புதிய ஒப்போ கே12எக்ஸ் 5ஜி போனை வாங்கிவிட முடியும்.

ஓப்போ கே12எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K12x 5G Specifications): 6.67 இன்ச் எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே டிஸ்பிளே உடன் இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் 1604 x 720 பிக்சல்ஸ் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், பாண்டா கிளாஸ் (Panda Glass) புரொடெக்சன், ஐ கம்போர்ட் மோட் (Eye Comport Mode) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும்கலர் ஓஎஸ்14 (ColorOS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
அதேபோல் பேட்டரி பர்ஃபாமென்ஸ், ஃபாஸ்ட் ஆப் லோட் போன்றவற்றுக்காக டிரினிட்டி என்ஜின் (Trity Engine) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன். பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
கேலக்ஸிகோர் ஜிசி32ஈ2 (GalaxyCore GC32E2) சென்சார் 32 எம்பி மெயின் கேமரா + கேலக்ஸிகோர் ஜிசி02எம்1பி (GalaxyCore GC02M1B) சென்சார் கொண்ட 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) என்கிற டூயல் கேமரா கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது.

எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிஃபைடு மிலிட்டரி-கிரேடு டியூரபிலிட்டி (Military-grade Durability) சப்போர்ட் கொண்டுள்ளதால் இந்த போனை நம்பி வாங்கலாம். மேலும் IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஓப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.
5ஜி என்ஏ/என்எஸ்ஏ (5G NA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வைஃபை, ஜிபிஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. 5100mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன். எனவே 30 நிமிடங்களில் இந்த போனை 50 சதவீதம் சார்ஜ் செய்துவிடலாம்.


Click it and Unblock the Notifications








