பிளிப்கார்ட் பிச்சிக்குது.. 23 சதவீத ஆஃபரில் 8000mAh பேட்டரி OnePlus போன்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனத்தில் 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக வெளியாகிய ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) ஸ்மார்ட்போன் இப்போது தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது. பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற மற்ற பீச்சர்களிலும் மிரளவிடுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி, பீச்சர்களை பார்க்கலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் எம்ஆர்பி விலையில் இருந்து 23 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.23,950 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,198 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.22,752 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ஈஎம்ஐ சலுகை மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கின்றன.

ஒன்பிளஸ் என்6 அம்சங்கள் (OnePlus N6 Specifications): 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி ஏபெக்ஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6360 Apex 6nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 1080p 60 FPS வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
8 எம்பி செல்பீ கேமராவில் 1080p 30 FPS வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த கேமராவில் ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ பர்ஃபெக்ட் ஷாட் (AI Perfect Shot), ஏஐ அன்பிளர் (AI Unblur), ஏஐ ரெஃப்ளெக்சர் எரைசர் (AI Reflection Eraser) மற்றும் ஏஐ போர்ட்ராய்டு குளோவ் (AI Portrait Glow) உள்ளிட்ட பீச்சர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஏஐ டீடெயில் பூஸ்ட் (AI Detail Boost) உள்ளது.
ஆகவே, இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் இருக்கும். சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கவில்லை. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) கொடுக்கப்பட்டு உள்ளன.
45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.88 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. மேலும், 224 கிராம் எடையில் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ற பேக்கப்பை இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் கொடுக்கும். IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்இடி, வை-பை 6 மற்றும் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மிட்நைட் கிரீன் மற்றும் ஃபிரஸ் மின்ட் ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
