அடிச்சான் பாரு அமேசான்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் Nokia போன்.. எந்த மாடல்?
எச்எம்டி குளோபல் நிறுவனம் எச்எம்டி பெயரில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தாலும், நோக்கியா பெயரில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை நிறுத்தவில்லை. அதாவது இந்நிறுவனம் தொடர்ந்து நோக்கியா ((Nokia) போன்களையும் அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் அமேசான் தளத்தில் நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது.
தற்போது அமேசான் (Amazon) தளத்தில் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.9249 இருந்தால் போதும் இந்த போனை வாங்க முடியும். இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G Specifications): 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (HD+ LCD) டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் (560 nits brightness) மற்றும் கொரில்லா கிளாஸ் 3 ( Gorilla Glass 3) பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்போன்.
அதேபோல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதி இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் உள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு(Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13(Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்குஅதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
குறிப்பாக 6ஜிபி ரேம் (4ஜிபி ரேம் + 2ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி42 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
அதேபோல் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வெளிவந்துள்ளது நோக்கியா ஜி42 5ஜி. பின்பு நைட் மோட் 2.0 (Night Mode 2.0), ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), ஓஇசட்ஓ ஆடியோ கேப்சர் (OZO 3D Audio Capture) உள்ளிட்ட சப்போர்ட் இந்த போனின் கேமராக்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். பின்பு சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi - Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப் - சி 2.0 (Type-C 2.0) போன்ற வசதிகள் இந்த போனில் உள்ளன.
5000 எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த அசத்தலான நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (20W fast charging) வசதியும் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications