Home
Mobile

இப்படியொரு ஆஃபர் வரவே வராது.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. கம்மி விலையில் Nokia போன்.. எந்த மாடல்?

எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு நோக்கியா போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அசத்தலான நோக்கியா போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் இயர் எண்ட் சேல் (Year End Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறும். தற்போது இந்த சிறப்பு விற்பனையில் நோக்கியா சி32 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இப்படியொரு ஆஃபர் வரவே வராது.. கம்மி விலையில் Nokia போன்.. எந்த மாடல்?

அதன்படி பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி32 (Nokia C32) ஸ்மார்ட்போன் 23 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. எனவே இந்த போனை ரூ.7999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும். மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்ப்போம்.

நோக்கியா சி32 அம்சங்கள் (Nokia C32 Specifications): 6.55-இன்ச் எசிடி பிளஸ் வி-நாட்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 1600 × 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸடோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி32 மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த நோக்கியா மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 5000 எம்ஏச் பேட்டரியுடன் இந்த அசத்தலான நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறுகிறது. பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி32 போன்.

இப்படியொரு ஆஃபர் வரவே வராது.. கம்மி விலையில் Nokia போன்.. எந்த மாடல்?

தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்புக்கு என ஐபி52 சான்றிதழ் கொண்டு வெளிவந்துள்ளது நோக்கியா சி32 வெளிவந்துள்ளது. அதேபோல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்விட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. சார்கோல், பிரேஸி மிண்ட் மற்றும் பீச் பிங்க் நிறங்களில் இந்த நோக்கியா போனை வாங்க முடியும்.

மேலும் எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
23 percent discount on Nokia C32 on Flipkart: check new price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X