Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.5,000 ரேட் கட்ல pOLED டிஸ்பிளே.. 125W ஃபாஸ்ட் சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?

பிஓஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 125W ஃபாஸ்ட் சார்ஜிங், 4500mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா (Motorola Edge 50 Ultra) போனுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) நம்ப முடியா டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் கொண்ட இந்த மோட்டோரோலா போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா பிளிப்கார்ட் விற்பனை (Motorola Edge 50 Ultra Flipkart Sale): இந்த மோட்டோவின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.59,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.49,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இந்த விலையில் ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம்.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.5,000 ரேட் கட்ல pOLED டிஸ்பிளே.. மாடல்?

ஆகவே, ரூ.44,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எச்டிஎப்சி கிரெடிட் கார்டு மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்த ரூ.5,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.7,250 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஈஎம்ஐ ஆப்ஷனுக்கும் ரூ.5,000 டிஸ்கவுண்ட் இருக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Edge 50 Ultra Specifications): இந்த மோட்டோவில் 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த கர்வ்ட் டிஸ்பிளே மாடலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு மற்றும் 2500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு பக்கா டிஸ்பிளே மாடலாக இருக்கும். இதுபோக எச்டிஆர்10+ (HDR10+), 446 பிபிஐ பிக்சன் டென்சிட்டி, 1.5K ரெசொலூஷன் போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) உள்ளது.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா போனானது பேட்டரியில் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. ஏனென்றால், 125W டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W வயர்லெஸ் பவர்ஷேரிங் சப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரியை கொடுக்கிறது. IP68 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி ஆட்டோ போகஸ் அல்ட்ரா வைடு கேமரா + 64 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மேக்ரோ ஆப்ஷன், 3X டெலிபோட்டோ ஜூம், 20X டிஜிட்டல் ஜூம் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆட்டோ போகஸ் கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி கொண்ட ஒரேவொரு வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
23 Percent Discount on Motorola Edge 50 Ultra With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X