யாரு சாமி அவன்.. ரூ.12,998 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. நம்ப முடியாத கம்மி விலைக்கு சோனி சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா மட்டுமல்லாமல், 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கிறது. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மார்கெட்டில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் ரூ.15,999ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் ரூ.16,999 ஆகவும் இருக்கிறது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் வேரியண்ட்டானது ரூ.12,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

இந்த விலைக்கு வாங்கி கொள்ள கிரெடிட் கார்டுகள் தேவையில்லை. மார்கெட் விலையில் இருந்து குறைக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. இதுபோக குறிப்பிட்ட பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.650 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, மேலும், அடிமட்ட விலைக்கு வாங்கி கொள்ளலாம். டைட்டானியம் கிரே (Titanium Grey) கலருக்கு மட்டுமே இந்த விலை குறைப்பு கிடைக்கிறது.
இதுபோக, ஸ்டார்லைட் பர்பிள் (Starlight Purple) கலரிலும் இந்த லாவா ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த ஸ்டார்லைட் பர்பிள் கலரில் 8 ஜிபி ரேம் வேரியண்ட் மட்டுமே இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதிலும் மார்கெட் விலை ரூ.16,999ஆக இருந்தும், விலை குறைப்பு போக ரூ.14,966 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Lava Blaze X 5G Specifications): இந்த லாவாவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டும், ஆண்ட்ராய்டு 14-க்கு 1 ஜெனரேஷன் அப்டேட்டும் கிடைக்கிறது.

இந்த கம்மியான பட்ஜெட்டிலும் 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கிறது. அதேபோல தரமான டிஸ்பிளே கொடுக்கிறது. அதாவது, இந்த பட்ஜெட்டில் எல்சிடி டிஸ்பிளே மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால், இதில் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. அதுவும் 3டி கர்வ்ட் டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமோலெட் டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பெற்று கொள்ளலாம். இந்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
இதில் டூயல் வியூ வீடியோ, ப்ரோ வீடியோ, போர்ட்ராய்டு போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. மெயின் கேமராவில் சோனி சென்சார் கிடைக்கிறது. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு நம்ப முடியாத பீச்சர்களையே கொடுத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications