பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.8000 போதும்.. AI கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
மார்கெட் அதிரும் விதமாக வெறும் ரூ.8000 பட்ஜெட்டில் 8ஜிபி ரேம், 1டிபி மெமரி, 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 18W சார்ஜிங் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட ஐடெல் பி55 5ஜி (itel P55 5G) போன் விற்பனைக்கு வருகிறது.
ஐடெல் பி55 5ஜி அம்சங்கள் (itel P55 5G Specifications): இந்த ஐடெல் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் கொண்டிருக்கிறது. மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த ஐடெல் பி55 5ஜி போனில் 6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. ஆகவே, பட்ஜெட்டிலும் மீடியம் பர்ஃபாமென்ஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது.
இந்த போனில் 4 ஜிபி ரேம் (4 ஜிபி டைனாமிக் ரேம்) + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் (6 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ் (microSD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது.
டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் கொண்டுள்ளது. இந்த ஐடெல் போனில் 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ கேமரா (AI Camera) சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. அதோடு 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த போனில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side mounted Fingerprint Scanner) வருகிறது. அதேபோல பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) வருகின்றன. இந்த ஐடெல் போனில் 5000mAh பேட்டரி வருகிறது.
இந்த பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் வருகிறது. அதோடு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் (USB Type-C Charging) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த ஐடெல் பி55 5ஜி போனானது, 5ஜி வேரியண்ட்டாகும். ஆகவே, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது.
அதோடு வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி பீச்சர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஐடெல் பி55 5ஜி போனில் மின்ட் கிரீன் (Mint Green) மற்றும் கேலக்ஸி ப்ளூ (Galaxy Blue) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9699ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 4 ஜிபி வேரியண்ட்டுக்கு பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.988 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
இந்த தள்ளுபடியை எச்எஸ்பிசி கிரெடிட் கார்டு (HSBC Credit Card) பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த ஐடெல் பி55 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டை வெறும் ரூ.8892 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் பக்காவான 5ஜி போன் வேண்டுமானால், இந்த மாடலை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








