மார்கெட் அதிருது.. வெறும் ரூ.7000 போதும்.. 7000mAh பேட்டரி.. AI கேமரா.. 8GB ரேம்.. எந்த போன்?
மார்கெட் அதிரும்படி பிளிப்கார்ட் (Flipkart) தள்ளுபடியில் 7000mAh பேட்டரி, ஏஐ கேமரா, 8ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட் கொண்ட ஐடெல் பி40 பிளஸ் (itel P40 Plus) போன் நம்ப முடியாத விலையில் கிடைக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
ஐடெல் பி40 பிளஸ் அம்சங்கள் (itel P40 Plus Specifications): இந்த ஐடெல் போன் பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்டிருக்கிறது. 6.8 இன்ச் (720 x 1640 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது. அதோடு பன்ஞ் ஹோல் டிசைன் (Punch Hole Design) கொண்டிருக்கிறது. இந்த ஐடெல் பி40 பிளஸ் போனில் ஆக்டா கோர் யுனிசோக் டி606 (Octa Core Unisoc T606) சிப்செட் வருகிறது.
அதோடு மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPu) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொண்டிருக்கிறது.இந்த ஐடெல் பி40 பிளஸ் போனின் கேமராவை பொறுத்தவரையில், டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) வருகிறது.

ஆகவே, எல்இடி பிளாஷ் லைட் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா வருகிறது. இதுவொரு ஏஐ லென்ஸ் சப்போர்ட் கொண்ட கேமரா மாடலாகும். 8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. எச்டிஆர் (HDR), டைம் லேப்ஸ் (Time Lapse), ப்ரோ (Pro) போன்ற பீச்சர்கள் வருகின்றன.
இந்த ஐடெல் போனில் மிரவிடும் அம்சமாக 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது
மேலும், சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வருகிறது. இந்த ஐடெல் பி40 பிளஸ் போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், டூயல் 4ஜி (Dual 4G), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) ஆகியவை வருகின்றன .
இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,099ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆஃபருடன் பிளிப்கார்ட்டில் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.
இப்போது, ரூ.7,699ஆக விலை இருக்கிறது. இந்த விலையிலும், ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.385 தள்ளுபடி கிடைக்கிறது.
ஆகவே, இந்த போனை வெறும் ரூ.7,314 விலையில் வாங்கிகொள்ளலாம். இந்த ஐடெல் பி40 பிளஸ் போனில் ஃபோர்ஸ் பிளாக் (Force Black) மற்றும் ஐஸ் சியான் (Ice Cyan) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மலிவான பட்ஜெட்டில் நல்ல பேட்டரி பேக்கப் கொண்ட போன் வேண்டுமானால், இந்த மாடலை மிக சரியான தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








