அமேசான் அதிருது.. பட்ஜெட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 44W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மட்டுமல்லாமல், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கொண்ட 50 எம்பி கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி, 16 ஜிபி ரேம் போன்ற மிரளவிடும் பீச்சர்களுடன் வெளியான ஐக்யூ இசட்9எஸ் (iQOO Z9s) போனுக்கு பட்டையை கிளப்பும் உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. இந்த ஐக்யூ போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, பேங்க் டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஐக்யூ இசட்9எஸ் அம்சங்கள் (iQOO Z9s Specifications): இந்த ஐக்யூ போனில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங், ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது. நைட் போட்டோகிராபிக்காக ஆரா லைட் (Aura Light) வருகிறது.

மேலும், 2 எம்பி பொக்கெ கேமரா வருகிறது. இந்த டூயல் ரியர் கேமராவில் சூப்பர் நைட் மோட் (Super Night Mode) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) வருகிறது. இந்த ஐக்யூ இசட்9எஸ் போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) வருகிறது. 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனல் உள்ளது.
இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) வருகிறது. மேலும், அவுட்டோர் அவுட்புட் கொடுக்க 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. அதேபோல மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
ஐக்யூ இசட்9எஸ் மாடலானது, ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது. பட்ஜெட்டை விட பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. பேட்டரி சிஸ்டம் கேமிங் பிரியர்களுக்கு பக்காவாக இருக்கிறது. 5500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி போர்ட் மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.
இந்த ஐக்யூ போனில் IP64 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. பெரிய பேட்டரியை பேக் செய்திருந்தும், 180 கிராம் எடை மட்டுமே வருகிறது. அதேபோல 7.49 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. டைட்டானியம் மேட் (Titanium Matte) மற்றும் ஆனிக்ஸ் கிரீன் (Onyx Green) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இதுவொரு 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி கொண்ட மாடலாகும். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,998ஆக இருக்கிறது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.1000 டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.18,750 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் உடன் ஆர்டருக்கு வந்துள்ளது. ஆகவே, ரூ.18,889 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications