Home
Mobile

பொளக்குது விற்பனை.. ரூ.12,499 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. 12GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் வெறும் ரூ.12,499 பட்ஜெட்டில் 6500mAh பேட்டரி மட்டுமல்லாமல், 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்கள் கிடைத்தால் அந்த போனின் விற்பனை சக்கைப்போடு போடாமலா இருக்கும்? அப்படியான பட்ஜெட் மற்றும் பீச்சர்களுடன் வெளியான ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G) போனின் வி்ற்பனை தொடங்கிவிட்டது. அமேசான் (Amazon) தளத்தில் பேங்க் டிஸ்கவுண்ட் போக இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி அமேசான் விற்பனை (iQOO Z10x 5G Amazon Sale): இந்த ஐக்யூவின் 6 ஜிபி ரேம் (6 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.13,499ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.16,499ஆகவும் இருக்கிறது.

பொளக்குது விற்பனை.. ரூ.12,499 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 44W சார்ஜிங்!

இந்த மார்கெட் விலையில் இருந்து ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக இப்போது ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,499 பட்ஜெட்டில் இந்த ஐக்யூ இசட்10எக்ஸ் போனை ஆர்டர் செய்யலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு ஆகியவை மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த ரூ.1000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z10x 5G Specifications): இந்த ஐக்யூ போனில் 3 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் மற்றும் 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் கிடைக்கிறது.

IP64 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை கொடுக்கிறது. இந்த ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி போனில் 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.72 இன்ச் (2408 x 1080 pixels) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. ஐ புரொடெக்சன் (Eye Protection) சப்போர்ட் உள்ளது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் பெற்று கொள்ளலாம். இதுபோக வெட் ஹேண்ட் டச் மற்றும் கிரீஸி ஹேண்ட் டச் சப்போர்ட் கொடுக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா கிடைக்கிறது. இதில் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) பேக் செய்யப்பட்டுள்ளது. லேட்டஸ்ட் ஏஐ கேமரா பீச்சர்களை கொடுக்கிறது.

ஆகவே, ஃபன்டச் ஓஎஸ் மூலம் ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance) லேட்டஸ்ட் பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல மல்டிமீடியாவிலும் ஏஐ டாக்குமெண்ட்ஸ் (AI Documents), ஏஐ டிரான்ஸ்லேஷன் (AI Translation) போன்ற பீச்சர்களும் வருகின்றன. 8 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி போன் கொடுக்கிறது.

சூப்பர் நைட் மோட் (Super Night Mode), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), ஓர்ஜின் அனிமேஷன் (Origin Animation) போன்ற பீச்சர்களும் இருக்கின்றன. இந்த போனில் 6500mAh பேட்டரி மற்றும் அதற்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. அல்ட்ராமரைன் (Ultramarine) மற்றும் டைட்டானியம் (Titanium) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
23 Percent Discount on iQOO Z10x 5G With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X