Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.9,000 விலை குறைப்பு.. AMOLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. 64MP டெலிபோட்டோ.. எந்த மாடல்?

கேமரா, டிஸ்பிளே, சிப்செட், பேட்டரினு எதை தொட்டாலும் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொடுக்கும் ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) போனுக்கு அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.9,000 விலை குறைப்பு கிடைக்கிறது. ஓம்னிவிஷன் டெலிபோட்டோ கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட இந்த ஐக்யூ 12 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஐக்யூ 12 5ஜி அம்சங்கள் (iQOO 12 5G Specifications): இந்த ஐக்யூவில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 64 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50எச் (Omnivision OV50H) மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது.

யாரு சாமி அவன்.. ரூ.9000 விலை குறைப்பு.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இதுபோக ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சப்போர்ட் உள்ளது. அதேபோல அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் பேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், டெலிபோட்டோவில் ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சார் + 100X டிஜிட்டல் ஜூமிங் + 3X ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் உள்ளது.

16 எம்பி செல்பீ ஷூட்டரில் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, கேமராவில் சென்சார், வீடியோ ஷூட், டெக்னாலஜி மற்றும் ஜூமிங்கில் எந்தவித குறையும் வைக்கவில்லை. டிஸ்பிளேவும் பிரீமியமாக இருக்கிறது. கேமிங் மற்றும் வீடியோ அவுட்புட்டுக்கு ஏற்ப 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) பிளாட் அமோலெட் (Flat AMOLED) டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மட்டும் கிடையாது. இருப்பினும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் பிரீமியம் யுஐ கொண்ட ஃபன்ட்ச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) பேக் செய்துள்ளது.

யாரு சாமி அவன்.. ரூ.9000 விலை குறைப்பு.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 மொபைல் (4nm Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பேட்டரி பீச்சரிலும் விட்டுவைக்கவில்லை, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கிறது. லெஜண்ட் ஒயிட் (Legend White), ஆல்பா (Alpha Grey) மற்றும் டெசர்ட் ரெட் (Desert Red) ஆகிய மூன்று கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ஐக்யூ போனின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.52,999 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், அமேசான் விற்பனையில் இப்போது ரூ.45,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதுபோக ரூ.2,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.43,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இது ரூ.9,000 விலை குறைப்பில் ஆர்டர் செய்வதாகும். பிரீமியம் மாடலை எதிர்பார்க்காத டிஸ்கவுண்ட்டில் வாங்கி வேண்டுமானால், இதை ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
23 Percent Discount on iQOO 12 5G With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X