ஆர்டர் தூள் பறக்க போகுது.. ரூ.8,999 பட்ஜெட்ல சோனி கேமரா.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் Infinix 5ஜி போன்..
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் flipkart monumental sale எனும் சிறப்பு விற்பனையில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சோனி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த இன்பினிக்ஸ் போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.8,999 விலையில் வாங்கிவிட முடியும்.

இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி அம்சங்கள் (Infinix Hot 50 5G Specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (HD+ LCD) டிஸ்பிளே உடன் இந்த வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி. 1600 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் XOS 14.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.
அதேபோல் 48எம்பி சோனி ஐஎம்எக்ஸ்582 சென்சார் (Sony IMX582 sensor) + டெப்த் சென்சார் + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor)உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது புது இன்பினிக்ஸ் போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000mAh பேட்டரி உடன் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
அதேபோல் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ ((5G SA / NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C), புளூடூத் 5.3 (Bluetooth 5.3) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த போன். ஸ்லீக் பிளாக் (Sleek Black), ட்ரீமி பர்ப்பிள் (Dreamy Purple),சேஜ் கிரீன் (Sage Green), Vibrant Blue ஆகிய நிறங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








