1 மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள இந்த இன்பினிக்ஸ் 5ஜி போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி.. எந்த மாடல்? என்ன விலை?
பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2024 (Flipkart Big Billion Days Sale) எனும் சிறப்பு விற்பனையில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சோனி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த கடந்த மாதம் தான் அறிமுகம் செய்யப்பட்டது.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.8749 விலையில் வாங்கிவிட முடியும்.

இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி அம்சங்கள் (Infinix Hot 50 5G Specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (HD+ LCD) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது இந்த போன். 1600 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. மேலும் XOS 14.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
அதேபோல் 48எம்பி சோனி ஐஎம்எக்ஸ்582 சென்சார் (Sony IMX582 sensor) + டெப்த் சென்சார் + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor)உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது புது இன்பினிக்ஸ் போன். ஸ்லீக் பிளாக் (Sleek Black), ட்ரீமி பர்ப்பிள் (Dreamy Purple),சேஜ் கிரீன் (Sage Green), Vibrant Blue ஆகிய நிறங்களில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போனை வாங்கலாம்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
குறிப்பாக 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ ((5G SA / NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C), புளூடூத் 5.3 (Bluetooth 5.3) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. மேலும் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போனின் எடை 188 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








