விஸ்வரூப விற்பனை.. ரூ.10,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) தள்ளுபடியில் 16 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, 1டிபி மெமரி சப்போர்ட் போன்ற முரட்டு அம்சங்களை கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி (Infinix Hot 30 5G) போன் ரூ.10,000 பட்ஜெட்டுக்கு வந்துள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Hot 30 5G Specification): இந்த இன்பினிக்ஸ் போனில் 6.78 இன்ச் (2460 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) மற்றும் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போனில் 8 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் வருகிறது.
மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. ஆகவே மைக்ரோஎஸ்டி சிலாட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொண்டிருக்கிறது. இந்த போனில் குவாட் எல்இடி ஃபிளாஷ் (Quad LED Flash) மற்றும் ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்ட டூயல் கேமரா சிஸ்டம் (Dual Camera System) வருகிறது.

ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. இந்த கேமராவில் சூப்பர் நைட் மோட் (Super Night Mode), ஃபிலிம் மாஸ்டர் (Film Master)போன்ற பீச்சர்கள் வருகின்றன. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது.
அதேபோல 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. IP53 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரி தொடர்ந்து 21 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கொடுக்கக்கூடியது. இந்த போனில் வரும் அல்ட்ரா பவர் சேவிங் மோடில் வெறும் 5 சதவீத சார்ஜில் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக ஸ்டாண்ட்பை நேரம் கிடைக்கும். இதற்கு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
நைட் பிளாக், அரோரா ப்ளூ மற்றும் மியாமி ஆரஞ்ச் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.12,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையில் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2,075 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம். ஆகவே, இந்த போனை வெறும் ரூ.10,924க்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








