மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் 2

இப்போது அந்நிறுவனம் தமது புதிய ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் 2 டாப்லட்டில் என்விஐடிஐஎ டெக்ரா 3 ப்ராஸஸரை அப்டேட் செய்யவிருக்கிறது என்ற செய்தி இன்னும் சில நாள்களுக்கு தலைப்பு செய்தியாக வரும்.
ஆசஸ் ட்ரான்ஸ்பார்மரின் தனித்துவம், அதன் முந்தைய தயாரிப்புகளை விட இந்த புதிய மொபைல் அதி விரைவாக இயங்கும். என்விஐடிஐஎ டெக்ரா 3 ப்ராஸஸரை கொண்டிருப்பதால் இதனுடைய செயல்திறன் இன்டலின் 2 டூவை விட சிறப்பாக இருக்கும்.
மேலும் இந்த மொபைல் 10.1 இன்ச் எல்இடி பேக்லிட் திரையைக் கொண்டிருக்கிறது. இந்த திரை ஐபிஎஸ் (1280 x 800) ஆல் சப்போர்ட் செய்யப்பட்டு மல்டி டச் வசதி கொண்டிருக்கிறது.
இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. வீடியோ காலிங் செய்ய வசதியாக 1.2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் உள்ளதால் நமக்கு வேண்டப்பட்டவர்களுடன் வீடியோ காலிங் செய்வது மிகவும் எளிதாக இருக்கும்.
ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் 2 எக்ஸ்டர்னல் சேமிப்பு சப்போர்ட்டுடன் 1 ஜிபி இன்டர்னல் சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இதன் சேமிப்பு அளவை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும்.
இந்த 3ஜி மொபைல் ஒரே நேரத்தில் பல செயல்களை ஆற்றக்கூடிய எஎஸ்யுஎஸ் லான்சர், மைலைப்ரரி போன்ற பல அப்ளிகேஷன்களையும் பெற்றிருக்கிறது.
மேலும் கிண்டில், ஸினியோ மேக்கஸின் மற்றும் ஆஸுஸ் சின்க் போன்ற அப்ளிகேஷன்களையும் கொண்டிருக்கிறது.
இதன் 16 மணி நேரம் இயங்க்ககூடிய 24.4 டபுள்யுஹச் லி-பாலிமர் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.
இதனுடைய கிவெர்ட்டி கீபோர்டு டாக் டச்பேடாகும். மேலும் இது தொடுதிரையுடன் உள்ளதால் நாம் எந்த வசதியையும் பயன்படுத்தி இதை இயக்க முடியும்.
இதனுடைய தொடுதிரை 10 இன்ச் அளவுடன் சிறந்த துல்லியான படங்களைக் காட்டுகிறது. இதில் படம் பார்க்கும் போது நமக்கு 3டி ஸ்டீரியோ எபக்ட் கிடைக்கும்.
இறுதியாக ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் 2ன் விலையைப் பார்த்தால் நாம் ரூ. 18200க்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications