ஏசர் வழங்கும் புதிய ஏசர் லிக்யுட் இ320

மின்னணு சாதன தயாரிப்பில் பெயர் பெற்ற ஏசர் நிறுவனத்தின் அந்த புதிய மொபைல் ஏசர் லிக்யுட் இ320 ஆகும். மலிவு விலையில் சிறந்த மொபைலை வாங்க வேண்டும் என்று விரும்பினால் இந்த மொபைலை தேர்ந்தெடுக்கலாம்.
அடுத்த மாதம் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கு வரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மொபைல் சந்தையில் உள்நாட்டு மொபைல் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் போட்டா போட்டியில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
இத்தருணத்தில் ஏசர் குறைந்த விலையில் நிறைந்த அம்சங்களுடன் கூடிய புதிய புதிய ஏசர் லிக்யுட் இ-320ஐ அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதனுடைய சோஷியல் ஜாக்கர் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிளிக்கர் போன்ற சோஷியல் நெட்வோர்க்குகளை விரைவாக இயக்க உதவுகிறது.
இதனுடை குறைபாடுகளை மறந்து பார்த்தால் புதிய ஏசர் லிக்யுட் இ-320 ஆன்ட்ராய்டு மார்க்கட்டிலிருந்து பதிவிரக்கம் செய்ய பல ப்ரீ அப்ளிகேஷன்களை வழங்குகிறது.
இதனுடைய திரை 3.5 இன்ச் மல்டி டச் டிஎப்டி ஆகும். இதனுடைய 5 மெகா பிக்ஸல் கேமரா கூடுதல் வசதியை வழங்குகிறது. மேலும் இந்த கேமரா எஸ்இடி ப்ளாஷையும் பெற்றிருக்கிறது.
வாடிக்கையாளர்களை மகிழ்விக்க எல்லா பைல்களையும் சப்போர்ட் செய்யும் தெளிவான ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர்களை வழங்குகிறது. மேலும் இதனுடைய 32ஜிபி மெமரி கார்ட் மற்றும் ஜிபிஎஸ் நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் ஆகியவை பயன்படுத்துவோரை ஆனந்தத்திற்கு இட்டுச் செல்லும்.
இதனுடைய டிவைஸ்கள் மிகவும் தரம் வாய்ந்தவை. மேலும் இது நீண்ட ஆயுளை கொண்ட பேட்டரி பேக்கப்பையும் பெற்றிருக்கிறது.
புதிய ஏசர் லிக்யுட் இ320 ரூ.15,000க்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மொபைல் எல்லா விதமான் அதிநவீன தொழில்நுட்பங்களையும் கொண்டு தரமான செயல்திறனை வழங்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications