ஹவாயின் புதிய இடியோஸ் எக்ஸ்5

Posted By: Staff

ஹவாயின் புதிய இடியோஸ் எக்ஸ்5
சூப்பரான தரத்திற்கும், கடின உழைப்புக்கும் பெயர் பெற்ற ஹவாய் மொபைல் நிறுவனம் குறைந்த விலையில் ஹவாய் இடியோஸ் எக்ஸ்5 யு8800 என்ற புதிய அறிமுகப்படுத்தவிருக்கிறது. 62 X 120 X 11.4 மில்லிமீட்டர் சுற்றளவுடன் இந்த மொபைல் 130 கிராம் எடையைக் கொண்டிருக்கிறது.

இது ஒரு கூகுள் ஆண்ட்ராய்டு 2.2.2 மொபைலாகும். இது 1000எம்ஹச்ஸட் சிபியு வேகத்தில் இயங்கக்கூடிய குவல்காம் ஸ்நாப்ட்ராகன் எம்எஸ்எம்8255 தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். இதனுடைய ராமை பார்த்தால் 512 எம்பி திறனையும் மற்றும் 13.7 ஜிபி ரோமையும் பெற்றிருக்கிறது. மேலும் 3.8 டையக்கோனல் டிஸ்பிளேயுடன் 4800 X 800 ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. இதன் ஹார்வேரை எடுத்துக் கொண்டால் ஸ்டீரியோ இன்பில்ட் மைக்ரோ போன்களையும் மோனோ ஒலிபெருக்கியையும் பெற்றிருக்கிறது. ஒலி அமைப்பை ஒழுங்குபடுத்த 3.5 எம்எம் ஜாக்கையும் இந்த மொபைல் வழங்குகிறது. அதேபோல் இந்த மொபைல் செல்லுலர் நெட்வொர்க்குகளான ஜிஎஸ்எம்850, ஜிஎஸ்எம்900, ஜிஎஸ்எம்1900, யுஎம்டிஎஸ்900 மற்றும் யுஎம்டிஎஸ்2100 போன்றவற்றையும் வழங்குகிறது. இதனுடைய செல்லுலர் டேட்டா தொடர்பு எட்ஜ் தொழில்நுட்பத்துடன் கூடிய ஜிபிஆர்எஸ் மற்றும் யுஎம்டிஎஸ், ஹச்டிபிஎ, ஹச்எஸ்யுபிஎ, ஹச்எஸ்பிஎ+ ஆகியவற்றால் ரிபைன்ட் செய்யப்படுகிறது.

மேலும் இந்த மொபைல் மல்டி தொடுதிரை வசதி கொண்டிருப்பதால் பயன்படுத்துவோருக்கு சௌகரியமாக இருக்கும். ஹவாயின் புதிய இடியோஸ் எக்ஸ்5 விரிவுபடுத்தக்கூடிய வசதிகளான மைக்ரோஎஸ்டி போர்ட், மைக்ரோஎஸ்டிஹச் மற்றும் ட்ரான்ஸ்ப்ளாஸ் போன்றவற்றையும் பெற்றிருக்கிறது. இதனுடைய யுஎஸ்பி போர்ட் யுஎஸ்பி 2.0 உடன் 480 எம்பிட்ஸ் மைக்ரோ யுஎஸ்பியால் ஆனது. மேலும் இது 2.1 ப்ளூடூத்தையும் கொண்டிருக்கிறது. அதோடு வயர்லஸ் எல்எஎன் வசதிகளான 802.11பி, 802.11ஜி மற்றும் 802.11என் ஆகியவையும் இந்த மொபைலில் உள்ளன.

பொழுதுபோக்கிற்காக ஹவாயின் புதிய இடியோஸ் எக்ஸ்5 எப்எம் ரேடியா (87.8-108எம்ஹச்ஸட்) மற்றும் 4,9 எம்பி கேமராவையும் வழங்குகிறது. இந்த கேமரா எல்இடி ப்ளாஷ் கொண்டிருப்பதால் படம் எடுத்தால் அது மிக துல்லியமாக இருக்கும். மேலும் இந்த கேமரா 1எக்ஸ் ஆப்டிக்கல் சூமை கொண்டிருப்பதும் இதன் இன்னொரு சிறப்பம்சமாகும். மேலும் இந்த மொபைல் ஜிபிஎஸ் சேவைகளான ஜிபிஎஸ் மற்றும் ஜியோ டேக்கிங்கையும் வழங்குகிறது. போனஸாக அக்ஸிலர்மீட்டரையும் வழங்குகிறது. எனவே இந்த மொபைலை ஒரு முழுமையான கனணி என்று அழைக்கலாம். ஹவாயின் புதிய இடியோஸ் எக்ஸ்5 வாடிக்கையாளர்களை ஒரு இன்ப உலகத்திற்கு அழைத்துச் செல்லும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்