Home
Mobile

மொபைல் போன் மார்க்கெட்டைக் கலக்க 2 ப்ளூபெரி போன்களைக் களமிறக்கும் ஸ்பைஸ்

By Super
மொபைல் போன் மார்க்கெட்டைக் கலக்க 2 ப்ளூபெரி போன்களைக் களமிறக்கும் ஸ்பைஸ்
பெரிய பெரிய ஜித்தன்களுக்கே கடுக்காய் கொடுத்த நிறுவனம் ஸ்பைஸ் மொபைல். பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையிலான போன்களை, விதம் விதமான டிசைன்களுடன் வெளியிட்டு, மைக்ரோமேக்ஸ், வீடியோகான், பிளை மொபைல், நோக்கியா, சோனி எரிக்சன், சாம்சங் என பெரிய பெரிய நிறுவனங்களுக்கே பெரும் சவாலாக விளங்கியது ஸ்பைஸ் மொபைலின் ஹேன்ட்செட்கள். இந்த நிலையில் தற்போது புத்தம் புதிய இரண்டு ப்ளூபெரி வகை போன்களை களம் இறக்குகிறது ஸ்பைஸ்.

ஒன்று ஸ்பைஸ் ப்ளூபெரி எக்ஸ்பிரஸ். இன்னொன்று ஸ்பைஸ் ப்ளூபெரி ஆரா.

இதில் ஸ்பைஸ் ப்ளூபெரி எக்ஸ்பிரஸ், இரட்டை சிம்களுடன் கூடியதாகும். அட்டகாசமான ஸ்டேன்ட்பை வசதியும் இதில் உள்ளது. பல சிறப்பம்சங்களையும் இதில் காணலாம். மல்டிமீடியாவைப் பொறுத்தவரை, இசை, வீடியோ, கேமரா, விரிவுபடுத்தக் கூடிய மெமரி உள்ளிட்ட அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இது கொண்டுள்ளது.

இரட்டை சிம் -இரண்டு ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்திலான வசதி. இரட்டை சிம் ஸ்டேண்ட்பை, இமெயில் மற்றும் உடனடி மெசேஜுக்கான வசதி, க்யூவெர்டி கீபேட், டிராக் பேடுடன், அழகான டெஸ்க்டாப், 2.0 மெகா பிக்ஸல் கேமரா, 8ஜிபி வரையிலான மெமரி வசதி, ஜாவா, ஜிபிஆர்எஸ் வசதிகள், விளையாட்டு, எம்பி4 பிளேயர், ப்ளூடூத் என வசதிகள் நீளுகின்றன.

அதேபோல ஆராவைப் பொறுத்தவரை அட்டகாசமான வசதிகளுடன் கூடியதாக அது உள்ளது. எக்ஸ்பிரஸுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை. இரண்டுமே ரூ. 5000 அல்லது அதற்கும் குறைவான விலையுடன் கூடியதாக இருக்கும் என்பது இன்னொரு முக்கியமான செய்தி. இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரைக் குறி வைத்து ஸ்பைஸ் போன்கள் எப்போதும் களம் இறக்கப்படும். அந்த வகையில் இந்த ப்ளூபெரி எக்ஸ்பிரஸும், ஆராவும் இந்திய செல்போன் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X