Home
Mobile

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. 6500mAh பேட்டரி.. சோனி கேமரா.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் அசத்தலான விவோ ஒய்39 5ஜி (Vivo Y39 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் (AI Screen Translation), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), 6500mAh பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது விவோ ஒய்39 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.15,999 விலையில் வாங்கிவிட முடியும்.

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ ஒய்39 5ஜி அம்சங்கள் (Vivo Y39 5G specifications): ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2) உடன் இந்த விவோ ஒய்39 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த விவோ போன் வெளிவந்துள்ளது.

6.68-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டியூவி ரெய்ன்லேண்ட் ஐ புரொடெக்டன் (TÜV Rheinland Eye Protection) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இந்த விவோ போன் ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் (AI Screen Translation), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), ஏஐ சூப்பர்லிங்க் (AI SuperLink), லைவ் டெக்ஸ்ட் (Live Text), உள்ளிட்ட பல்வேறு AI அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் உடன் இந்த போன் வெளிவந்தது.

50எம்பி சோனி ஏஐ மெயின் கேமரா + 2எம்பி bokeh கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 6500mAh பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஓசன் ப்ளூ (Ocean Blue) மற்றும் லோட்டஸ் பர்பிள் (Lotus Purple) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

குறிப்பாக IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) ஆதரவும் உள்ளது. 5ஜி, புளூடூத் 5.1, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
22 Percent Discount on vivo Y39 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X