வெறும் ரூ.13249 போதும்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் விவோ ஒய்28 5ஜி (vivo Y28 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிபசெட், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த விவோ ஒய்28 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் தற்போது விவோ ஒய்28 5ஜி போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த விவோ போனை ரூ.13249 இருந்தால் வாங்கிவிட முடியும்.

விவோ ஒய்28 5ஜி அம்சங்கள்(Vivo Y28 5G specifications): 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே (LCD Display) வசதியுடன் இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் டிஸ்பிளே 1612 × 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 83 சதவீதம் என்டிஎஸ்சி கலர் காமட் (NTSC Color Gamut), வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் (MediaTek Dimensity 6020 SoC)கொண்டுள்ளது இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன். இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஃபன்டச் ஒஸ் 13 (FunTouch OS 13) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு தகவல்கள் கிடைக்கும்.
குறிப்பாக மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம். இதுதவிர சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.
அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் செட்டப் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக கிரிஸ்டல் பர்பிள் (Crystal Purple) மற்றும் கிளிட்டர் அக்வா (Glitter Aqua) நிறங்களில் நிறங்களில் இந்த விவோ போனை வாங்க முடியும்.
5ஜி, டூயல் சிம், வைஃபை 5, புளூடூத் 5.1, என்எப்சி, ஜிபிஎஸ், எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்28 5ஜி. மேலும் ஐபி54 ரேட்டிங் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம். பின்பு இந்த விவோ போனின் எடை 186 கிராம் ஆகும். அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கம்மி பட்ஜெட்டில் இந்த போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








