Home
Mobile

கூவி, கூவி விற்கும் அமேசான்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் விவோ ஒய்28 5ஜி (Vivo Y28 5G) ஸ்மார்ட்போன் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் விவோ ஒய்28 5ஜி போன் வெளிவந்தது.

தற்போது அமேசான் தளத்தில் விவோ ஒய்28 5ஜி 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.13249 இருந்தால் போதும் இந்த விவோ 5ஜி போனை வாங்க முடியும்.

கூவி, கூவி விற்கும் அமேசான்..ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ ஒய்28 5ஜி அம்சங்கள் (Vivo Y28 5G specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் (MediaTek Dimensity 6020 SoC) வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு ஃபன்டச் ஒஸ் 13 (FunTouch OS 13) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 ( Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்28 5ஜி போன். மேலும் 1612 × 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 83 சதவீதம் என்டிஎஸ்சி கலர் காமட் (NTSC Color Gamut), வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

கூவி, கூவி விற்கும் அமேசான்..ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

குறிப்பாக மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்28 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ ஒய்28 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.

கூவி, கூவி விற்கும் அமேசான்..ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

இந்த விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக கிரிஸ்டல் பர்பிள் (Crystal Purple) மற்றும் கிளிட்டர் அக்வா (Glitter Aqua) நிறங்களில் நிறங்களில் இந்த விவோ போன் வாங்க கிடைக்கும்.

இந்த விவோ போனின் கனெக்டிவிட்டி பொறுத்தவரை, டூயல் சிம், 5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.1, என்எப்சி, ஜிபிஎஸ்,எப்எம் ரேடியோ உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் ஐபி54 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த போன். பின்பு இந்த விவோ போனின் எடை 186 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
22 Percent Discount on Vivo Y28 5G With 4GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X