Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 44W சார்ஜிங்.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனத்தின் விவோ டி3எக்ஸ் 5ஜி (vivo T3x 5G) ஸ்மார்ட்போன் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கிறது. அதாவது இந்த புதிய விவோ போன் ஆனது 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.12,499 விலையில் வாங்க முடியும். இப்போது இந்த விவோ போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் விவோ போன்..

விவோ டி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (vivo T3x 5G Specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) டிஸ்பிளே வசதியுடன் விவோ டி3எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4என்எம் அடிப்படையிலான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 14 (FuntouchOS 14) மூலம் இயங்குகிறது இந்த அட்டகாசமான விவோ போன். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் விவோ போன்..

எப்/1.8 அபெக்ஷர் கொண்ட 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + எப்/2.4 அபெக்ஷர் கொண்ட 2 மெகாபிக்சல் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் இந்த போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. குறிப்பாக தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த விவோ போன்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் விவோ போன்..

6000எம்ஏஎச் பேட்டரியுடன் (6000mAh battery) இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியும் உள்ளது. சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
22 Percent Discount on vivo T3x 5G With 128GB Storage in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X