வெறும் ரூ.12,499 போதும்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
இந்திய சந்தையில் விவோ ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் தனித்துவமான வடிவமைப்பு, தரமான சிப்செட், மற்றும் அருமையான கேமரா வசதியுடன் விவோ போன்கள் வெளிவருகின்றன. எனவே தான இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் விவோ டி3எக்ஸ் 5ஜி (vivo T3x 5G) போனுக்கு பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி3எக்ஸ் 5ஜி போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.12,499 விலையில் வாங்கிவிட முடியும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவோ டி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (vivo T3x 5G Specifications): ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போன் வெளிவந்தது. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 14 (FuntouchOS 14) மூலம் இயங்குகிறது இந்த போன்.
அதேபோல் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) டிஸ்பிளே வசதியுடன் விவோ டி3எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz refresh rate), 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (1000 nits peak brightness) மற்றும் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
குறிப்பாக எப்/1.8 அபெக்ஷர் கொண்ட 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + எப்/2.4 அபெக்ஷர் கொண்ட 2 மெகாபிக்சல் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. குறிப்பாக தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 (IP64) ரேட்டிங் கொண்டுள்ளது இந்த விவோ போன்.

விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரியுடன் (6000mAh battery)பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியும் உள்ளது. சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.
டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த போன். மேலும் 5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) இதில் உள்ளது.


Click it and Unblock the Notifications