Home
Mobile

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இன்று பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் (Flipkart Big Diwali sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விற்பனையில் தரமான சாம்சங் போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். எனவே இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்

சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A15 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6100 (MediaTek Dimensity 6100 Plus) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஒன் யுஐ 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் 6.5-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி போன். மேலும் 2340 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்

குறிப்பாக 5000mAh பேட்டரி உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. அதேபோல சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதி இதில் உள்ளது.

மேலும் டூயல் சிம், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, ஜிஎன்எஸ்எஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் ப்ளூ பிளாக், ப்ளூ மற்றும் லைட் ப்ளூ நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
22 Percent Discount on Samsung Galaxy A15 5G with 6GB Ram in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X