ஆர்டர் போட்ருங்க.. 5000mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
ரியல்மி சி63 5ஜி (Realme C63 5G) ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. டைமன்சிட்டி சிப்செட், 32எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்தது. இப்போது ரியல்மி சி63 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி63 5ஜி போனுக்கு 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினர் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி சி63 5ஜி அம்சங்கள் (realme C63 5G specifications): 6.67 இன்ச்எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி போன் வெளிவந்தது. இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட், 1604 x 720 பிக்சல்கள், 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் ஆக்டா கோர் 6என்எம் (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் இந்த போனில் உள்ளது.
கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியுடன் இந்த ரியல்மி போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது இந்த ரியல்மி சி63 5ஜி மாடல். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
32எம்பி ஏஐ ரியர் கேமரா ஆதரவுடன் ரியல்மி சி63 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி சி63 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 10W சார்ஜிங் ஆதரவும் இந்த போனில் உள்ளது. IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker), 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. ஸ்டார்ரி கோல்டு (Starry Gold) மற்றும் ஃபரஸ்ட் கிரீன் (Forest Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications