அரளுது மார்கெட்.. வெறும் ரூ.16,749 போதும்.. 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
108 எம்பி கேமரா, 13 ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-பிரீமியம் அம்சங்களை கொண்ட ரியல்மி 9 (Realme 9) போனானது, அசத்தலான தள்ளுபடியில் வெறும் ரூ.16,749 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ரியல்மி 9 அம்சங்கள் (Realme 9 Specifications): இந்த ரியல்மி போன் 6.4 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

இந்த ரியல்மி போனுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாடலில் மிரட்டலான டிரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) வருகிறது. ஆகவே, 108 எம்பி மெயின் கேமராவானது, சாம்சங் ஐசோசெல் எச்எம்6 (Samsung ISOCELL HM6) சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் (Ultra Wide Angle Lens) மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) வருகிறது. இந்த போர்ட்ராய்டு கேமரா 2 எம்பி மேக்ரோ லென்ஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. மெயின் கேமராவோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது.
இந்த கேமராவில் ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட், நைட் மோட் போன்ற ரியல்மி போன்களில் வரும் பிரத்யேக மோட்கள் வருகின்றன. அதேபோல 16 எம்பி செல்பீ கேமராவானது, சோனி ஐஎம்எக்ஸ்471 (Sony IMX471) சென்சாருடன் வருகிறது. இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 12 (Android 12) மற்றும் ரியல்மி யுஐ 3.0 (realme UI 3.0) ஓஎஸ் சப்போர்ட் வருகிறது.

அதோடு ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 6என்எம் மொபைல் (Octa Core Snapdragon 680 6nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ரியல்மி போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வருகின்றன. 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், 256 ஜிபிக்கான மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஹார்ட் ரேட் டிராக்கிங் (Heart Rate Tracking) பீச்சருடன் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res audio) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது.
இந்த ரியல்மி 9 போனில் 33W டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. அதோடு டைப்-சி சார்ஜிங், டூயல் 4ஜி, வை-பை 5, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பக்கா ஸ்லிம் டிசைனில் 178 கிராம் எடை கொண்டிருக்கிறது.
இந்த மாடலில் சன்பர்ஸ்ட் கோல்டு (Sunburst Gold), ஸ்டார்கேஸ் ஒயிட் (Stargaze White) மற்றும் மீடியர் பிளாக் (Meteor Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின், ரூ.17,999ஆக விலை குறைக்கப்பட்டது.

இப்போது, இந்த விலையில் அமேசான் (Amazon) தளத்தில் அதிரடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த போனை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால், ரூ.1250 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதோடு ரூ.16,900 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 108 எம்பி கேமரா கொண்ட இந்த போனை வெறும் ரூ.16,749க்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








