Home
Mobile

அடிச்சு புடிச்சு ஆர்டர்.. வெறும் ரூ.16,699 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 2TB மெமரி.. எந்த மாடல்?

ரியல்மி பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான தள்ளுபடியில் 108எம்பி கேமரா, 16ஜிபி ரேம், 2 டிபி மெமரி சப்போர்ட், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற தட்டித்தூக்கும் அம்சங்களை கொண்ட ரியல்மி 11 5ஜி (Realme 11 5G) போன் கிடைக்கிறது.

ரியல்மி 11 5ஜி அம்சங்கள் (Realme 11 5G Specifications): இந்த ரியல்மி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி5 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ரூ.16,699 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 2TB மெமரி.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டிருக்கிறது. இந்த ரியல்மி மாடலில் 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz டைனாமிக் ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரியல்மி 11 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதோடு 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த மாடலில் மிரட்டலான டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. அந்த வகையில், எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 108 எம்பி மெயின் கேமரா, ஐசோசெல் எச்எம்6 (ISOCELL HM6) சென்சாருடன் வருகிறது. அதோடு 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.16,699 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 2TB மெமரி.. எந்த மாடல்?

இந்த கேமராவில் 3x லாஸ்லெஸ் ஜூமிங் சப்போர்ட் உள்ளது. அதோடு குயிக் ஷாட் அக்சிலரேஷன் என்ஜின் (QuickShot Acceleration Engine), இமேஜ் ஃப்யூஷன் என்ஜின் (Image Fusion Engine) மற்றும் சூப்பர் நைட்ஸ்கேப் என்ஜின் (Super Nightscape Engine) போன்ற பீச்சர்கள் வருகின்றன. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

இந்த கேமராவை போலவே பேட்டரி சிஸ்டமும் பிரம்மாண்டமாகவே இருக்கிறது. ஆகவே, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மூலம் வெறும் 17 நிமிடங்களில் 0-50 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்த பேட்டரியை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், 18.7 மணி நேரத்துக்கு வீடியோ பிளே பேக் மற்றும் 9.9 மணி நேரத்துக்கு கேமிங் பேக்கப் கிடைக்கும்.

இந்த பேட்டரிக்கு டைப்-சி (Type-C) சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) இடம் பெற்றுள்ளது. மேலும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. இந்த போன் 190 கிராம் எடை கொண்டிருக்கிறது. இந்த போன் குளோரி பிளாக் மற்றும் குளோரி கோல்டு ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த ரியல்மி 11 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் 256 மாடலின் விலை குறைக்கப்பட்டு, ரூ.17,949க்கு விற்பனையாகிறது. இந்த விலையில் அமேசான் தளத்தில் ரூ.1,250 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை ரூ.16,699க்கு வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
22 Percent Discount on Realme 11 5G in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X