மிரளுது பிளிப்கார்ட்.. ரூ.22000 பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி மாடல்!
இந்த பட்ஜெட்டில் இப்படிவொரு போன் கிடைக்காது என்று அடித்து சொல்லும்படியான விலை குறைப்பு மற்றும் டிஸ்கவுண்ட்டில் அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 256ஜிபி மெமரி, 67W சார்ஜிங் கொண்ட போகோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி (POCO X6 Pro 5G) விற்பனையாகிறது.
வேகன் லெதர் பேனல், ஹைபர் ஓஎஸ், டைமன்சிட்டி அல்ட்ரா சிப்செட் போன்ற மற்ற பீச்சர்களிலும் மிரளவிடுகிறது. ரூ.26,999 பட்ஜெட்டில் அறிமுகமாகி விற்பனையில் சக்கைப்போடுபோட்ட இந்த போன் இப்போது, விலை குறைப்பில் நம்ப முடியாத பட்ஜெட்டில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் பேங்க் டிஸ்கவுண்ட்டும் கிடைப்பதால், ஆர்டர் குவிகிறது.

போகோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி அம்சங்கள் (POCO X6 Pro 5G Specifications): இந்த போக்கோவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்ட 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMLOED) டிஸ்பிளே வருகிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1920Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Visio) சப்போர்ட் உள்ளது. சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8300 Ultra 4nm) சிப்செட் வருகிறது.
4 வருட அப்கிரேட் சப்போர்ட் உடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது. 64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. OIS சப்போர்ட் உள்ளது.

போர்ட்ராய்டு மோட், நைட் மோட், மூவி ஃபிரேம், வாய்ஸ் ஷட்டர் போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. 4K ரெக்கார்டிங் வருகிறது. அதேபோல பால்ம் ஷட்டர், வாய்ஸ் ஷட்டர், போர்ட்ராய்டு, ஷார்ட் வீடியோ, விலாக் மோட் போன்ற பீச்சர்களுடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
இந்த போகோ போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
டைப்-சி போர்ட் (Type-C Port) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) வருகின்றன. அண்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது.
வேகன் லெதர் (Vegan Leather) பேனல் டிசைனில் போக்கோ யெல்லோ (POCO Yellow) கொண்டிருக்கிறது. அதேபோல ஸ்பெக்டர் பிளாக் (Spectre Black) மற்றும் ரேசிங் கிரே (Racing Grey) கலர்களிலும் கிடைக்கிறது. IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொண்டுள்ளது.
இந்த போக்கோவின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது விலை குறைப்பு செய்யப்பட்டு பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் வெறும் ரூ.23,999 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையிலும் ரூ.1200 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
இந்த டிஸ்கவுண்ட்டை பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, அமோலெட் டிஸ்பிளே, வேகன் லெதர் பேனல், 16 ஜிபி ரேம், ஓஐஎஸ் கேமரா, ஹைபர்ஓஎஸ் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொண்ட இந்த போக்கோ எக்ஸ்6 ப்ரோ போனை ரூ.22,799 பட்ஜெட்டில் வாங்கிகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








