மிரளுது விற்பனை.. வெறும் ரூ.12,999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. AI கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) தள்ளுபடியில் பிரீமியம் டிசைனில் 16ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G) போன் கிடைக்காத கம்மி விலைக்கு கிடைக்கிறது.
போக்கோ எம்6 ப்ரோ அம்சங்கள் (POCO M6 Pro Specifications): இந்த போக்கோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் வருகிறது. அதோடு எம்ஐயுஐ 14 ஓஎஸ் (MIUI 14 OS) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல கேமிங் பிரியர்களை கவரும்படியான அட்ரினோ 613 ஜிபுயு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போக்கோ மாடலானது, 6.79 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும்.
இந்த டிஸ்பிளேவில் 550 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்டிருக்கிறது. இந்த போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் வருகின்றன.
இந்த 8 ஜிபி ரேம் வேரியண்ட்டில் கூடுதலாக 8 ஜிபி டைனாமிக் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு (microSD) சப்போர்ட் வருகிறது. இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு யுஎஸ்பி-சி சார்ஜிங் வருகிறது. இந்த போக்கோ மாடலில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா கொண்ட டூயல் ரியர் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) இடம் பெற்றுள்ளது.
சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), டூயல் நானோ சிம் சிலாட் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் கொண்டிருக்கிறது. அதேபோல 3.5 மிமீ இயர்போன் ஜாக், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 5ஜி, டூயல் 4ஜி கனெக்டிவிட்டி வருகிறது.
மேலும், ப்ளூடூத் 5.1, வைபை 6, ஜிபிஎஸ் போன்றவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போக்கோ போனில் ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green), பவர் பிளாக் (Power Black) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 10,999ஆக இருக்கிறது.
அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 12,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டுக்கு பிளிப்கார்ட் தளத்தில் அசத்தலான தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
இந்த போனை எச்டிஎப்சி அல்லது ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த வேரியண்ட்டை வெறும் ரூ.12,999க்கு வாங்கிகொள்ளலாம். கம்மி பட்ஜெட்டில் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட 5ஜி போன் வேண்டுமானால், இந்த போக்கோ போனை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








