ஆர்டர் மேல் ஆர்டர்.. பட்ஜெட்ல 12GB ரேம்.. 5100mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 5100mAh பேட்டரி, 45W சூப்பர்வூக் சார்ஜிங், கேலக்ஸி கோர் சென்சார் கேமரா போன்ற பீச்சர்களை கொண்ட ஓப்போ கே12எக்ஸ் 5ஜி (OPPO K12x 5G) போனுக்கு நல்ல டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி கொண்ட இந்த ஓப்போ போனின் முழு பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் என்ன?
ஓப்போ கே12எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K12x 5G Specifications): இந்த ஓப்போ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கொண்ட 6என்எம் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி (6nm MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் இருக்கிறது. மீடியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இந்த எல்சிடி டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் பாண்டா கிளாஸ் (Panda Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. மேலும், 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 16.7 கலர் டெப்த் மற்றும் 120Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் மற்றும் 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த வேரியண்ட்களில் 1 டிபி மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சிலாட் கிடைக்கிறது.
32 எம்பி மெயின் கேமரா + 2எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) வருகிறது. மெயின் கேமராவில் கேலக்ஸிகோர் ஜிசி32ஈ2 (GalaxyCore GC32E2) சென்சாரும், டெப்த் கேமராவில் கேலக்ஸிகோர் (GalaxyCore GC02M1B) சென்சாரும் கிடைக்கிறது. இந்த கேமராவில் டூயல் வியூ வீடியோ கிடைக்கிறது.
மேலும், போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode), ஹை-ரெஸ் மோட் (Hi-Res Mode) போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. 8 எம்பி செல்பீ ஷூட்டரில் கேலக்ஸிகோர் ஜிசி08ஏ8 டபுள்யூஏ1எக்ஸ்ஏ (GalaxyCore GC08A8 WA1XA) சென்சார் பேக் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த பட்ஜெட்டிலும் 3 கேமராக்களும் சென்சார்கள் வந்துள்ளது.
இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனில் மிலிட்டர் கிரேடு டியூரபிலிட்டி கொண்ட MIL STD 810H சர்டிபிகேஷன் மற்றும் IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, குவாலிட்டி பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. இப்போது, பேட்டரிக்கு வருவோம், 5100mAh பேட்டரி கிடைக்கிறது. 45W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் அமேசான் தளத்தில் விலை ரூ.13,265ஆக இருக்கிறது. இந்த ஓப்போவின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ இருக்கிறது. டைப்-சி போர்ட் மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது.
இந்த விலையில் கனரா பேங்க் கிரெடிட் கார்டுக்கு உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,265 பட்ஜெட்டில் இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.12,550 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை வருகிறது. பிரீஸ் ப்ளூ (Breeze Blue) கலரில் ஆர்டருக்கு கிடைக்கிறது. மேலும், மிட்நைட் வயலெட் (Midnight Violet) வருகிறது.


Click it and Unblock the Notifications








