மிரளுது ஆர்டர்.. ரூ.20,999 போதும்.. AMOLED டிஸ்பிளே.. OV கேமரா.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
கொஞ்சம் பழசுதான் அதுக்குனு இப்படியா என்று கேட்கும்படியான டிஸ்கவுண்ட் விலையில் அமோலெட் டிஸ்பிளே, ஓம்னிவிஷன் மெயின் கேமரா, சோனி சென்சார் செல்பீ ஷூட்டர், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட ஓப்போ எப்27 5ஜி (OPPO F27 5G) போன் விற்பனைக்கு கிடைக்கிறது. நேரடி விலை குறைப்பில் கிடைப்பதால் இந்த போனை ஆர்டர் செய்ய கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகள் தேவையில்லை. இந்த ஓப்போ எப்27 5ஜி போனின் விவரங்கள் இதோ.
இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.22,999 ஆக இருக்கிறது. இந்த விலைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.20,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.2000 விலை குறைப்பில் ஆர்டர் செய்ய முடிகிறது. இதற்கு கிரெடிட், டெபிட் கார்டுகள் தேவையில்லை.

ஓப்போ எப்27 5ஜி அம்சங்கள் (OPPO F27 5G Specifications): இந்த ஓப்போ போனில் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஏஜிசி டிடி-ஸ்டார் 2 (AGC DT-Star2) பாதுகாப்பு கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) இந்த ஓப்போ போனில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் கூடுதல் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. 128 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 256 ஜிபி மெமரி வேரியண்ட்டும் கிடைக்கிறது.
மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடையாது. ஆகவே, ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் (Hybrid Dual SIM Slot) மட்டும் கிடைக்கிறது. அதேபோல டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) போர்ட் வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டில் சோனி & ஓவி சென்சார்கள் கிடைக்கின்றன.
ஆகவே, ஓம்னிவிஷன் ஓவி50டி (Omnivision OV50D) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + ஓம்னிவிஷன் ஓவி02பி1பி (Omnivision OV02B1B) சென்சாருடன் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கிடைக்கிறது. இதுபோக 32 எம்பி செல்பீ ஷூட்டரில் சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சார் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் கூடுதல் சென்சார்களை எதிர்பார்க்க முடிகிறது.
இந்த ஓப்போ எப்27 5ஜி போனில் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. 2 கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.
ஆகவே, எம்ரால்டு கிரீன் (Emerald Green) மற்றும் ஆம்பர் ஆரஞ்ச் (Amber Orange) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) சப்போர்ட் கொடுக்கிறது. ரூ.25,000 பட்ஜெட்டில் கிடைக்கும் பீச்சர்களை ரூ.20,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த ஓப்போ எப்27 5ஜி போன் பக்கா ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications