Home
Mobile

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.12,349 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. OIS கேமரா.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஜி64 5ஜி (MOTOROLA g64 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ஏற்கவே, விலை குறைப்பு கிடைப்பதால், இப்போது மேலும் கம்மியான விலைக்கு வாங்க முடிகிறது. 6000mAh பேட்டரி, 30W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த மோட்டோரோலா ஜி64 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, பீச்சர்கள் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,000 விலை குறைப்பு போக ரூ.13,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு போக ரூ.1,650 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,349 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.12,349 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி!

மோட்டோரோலா ஜி64 5ஜி அம்சங்கள் (MOTOROLA g64 5G Specifications): இந்த மோட்டோ போனில் 6.5 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டுக்கு எதிர்பார்க்க முடியாதபடி கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் மை யுஎக்ஸ் (My UX) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7025 6nm) சிப்செட் மற்றும் IMG BXM 8 256 GPU கிடைக்கிறது.

ஆகவே, பர்ஃபாமென்ஸ் பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்காவாக இருக்கும். 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி மற்றும் டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா ஜி64 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மேக்ரோ மற்றும் டெப்த் சப்போர்ட் கொடுக்கப்படுகிறது.

மேலும், இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல 16 எம்பி செல்பீ ஷூட்டரும் 1080p வீடியோ ரெக்கார்டிங்குடன் வருகிறது. பக்கா பேக்கப் கொடுக்கும்படி 6000mAh பேட்டரி மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இந்த மோட்டோ இருக்கிறது.

இன்-டிஸ்பிளே கிடையாது, சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. இருப்பினும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொடுத்து இருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) இந்த மோட்டோவில் கிடைக்கிறது.

மேலும், IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா ஜி64 5ஜி ஸ்மார்ட்போனில் மின்ட் கிரீன் (Mint Green), பேர்ல் ப்ளூ (Pearl Blue) மற்றும் ஐஸ் லைலாக் (Ice Lilac) ஆகிய மூன்று கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 14 5ஜி பேண்ட்களுடன் கனெக்டிவிட்டி கிடைக்கிறது.

இந்த மோட்டோரோலா ஜி64 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது. ஆகவே, ஓஎஸ் மட்டுமே உங்களுக்கு டிராபேக்காக தோன்றலாம். ஆனால், மற்ற பீச்சர்கள் பட்டையை கிளப்பும்படியே இருக்கின்றன. பட்ஜெட்டுக்கு ஏற்றதாக உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
22 Percent Discount on MOTOROLA g64 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X