வெறும் ரூ.12,999 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது மோட்டோரோலா ஜி54 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.
பிளிப்கார்ட் ( Flipkart) தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி54 5ஜி போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனேவ இந்த போனை ரூ.13,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.

எனவே ரூ.12,999 இருந்தால் போதும் மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கிவிட முடியும். மேலும் இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
மோட்டோரோலா ஜி54 5ஜி அம்சங்கள் (Moto G54 5G specifications): இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும்1080 x 2400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் (dynamic refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், பாண்டா கிளாஷ் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 (Dimensity 7020) 6என்எம் பிராசஸர் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி சிறந்த மென்பொருள் அமைப்பு இதில் உள்ளது. அதேபோல் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனால் சமீபத்தில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 14 (Android 14) அப்டேட் கிடைத்தது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன். மேலும் இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் எடை 192 கிராம் ஆகும்.
மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. மிட்நைட் ப்ளூ (Midnight Blue), மிண்ட் க்ரீன் (Mint Green) மற்றும் பியர் ப்ளூ (Pear Blue) நிறங்களில் இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி போன் வாங்கக் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








