Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. QUAD கேமரா.. 68W சார்ஜிங்.. 4600mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 3டி கர்வ்ட் பிஓஎல்இடி டிஸ்பிளே, குவாட் பிக்சல் டெக்னாலஜி கேமரா, 68W டர்போபவர் சார்ஜிங், 4600mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 40 (Motorola Edge 40) போனுக்கு அசரடிக்கும் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 40 அம்சங்கள் (Motorola Edge 40 Specifications): இந்த மோட்டோவில் 6.55 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. QUAD கேமரா.. 68W சார்ஜிங்.. 4600mAh பேட்டரி!

அதோடு 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் வேரியண்ட்டில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 8020 6என்எம் (Octa Core Dimensity 8020 6nm) சிப்செட் வருகிறது. அதோடு மாலி ஜி77 எம்சி9 ஜிபியு (Mali-G77 MC9 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஒரே வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. மைக்ரோஎஸ்டி கார்டு (microSD) சப்போர்ட் கொடுக்கப்பட்டவில்லை. ஆகவே, டூயல் ஹைபிரிட் நானோ சிம் சிலாட் (Dual Hybrid Nano SIM Slot) மட்டுமே கொண்டிருக்கிறது. இந்த மோட்டோவில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

ஆகவே, குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 13 எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோபோகஸ் கேமரா (Ultra-wide Autofocus Camera) வருகிறது. இந்த அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவில் மோக்ரோ ஆப்சன் (Macro Option) கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவொரு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட கேமரா மாடலாகும். இந்த டூயல் கேமராவோடு எல்இடி பிளாஷ் (LED Flash) இடம் பெற்றுள்ளது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவிலும் குவாட் பிக்சல் டெக்னலாஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கொண்டிருக்கிறது.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 போனில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. அதேபோல 3 மைக்ரோபோன்கள் (Microphones) வருகின்றன. ஆகவே, ஆடியோ குவாலிட்டி பிரீமியமாக பக்கா எதிர்ப்பார்க்கலாம்.

IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water/Dust Resistant) கொண்டிருக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 போனில் பேட்டரி சிஸ்டம் மிரளவிடுகிறது. 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி வருகிறது. அதோடு 15W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging), 5W ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் வருகிறது.

இந்த போனில் 5ஜி எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போனில் விவா மெஜந்தா (Viva Magenta), எக்லிப்ஸ் பிளாக் (Eclipse Black), நெபுலா கிரீன் (Nebula Green), லூனார் ப்ளூ (Lunar Blue) ஆகிய 4 கலர்கள் விற்பனைக்கு வருகிறது.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 போனின் விலை ரூ.26,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.1,350 தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடியை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கலாம். ஆகவே, இந்த போனை வெறும் ரூ.25,649 பட்ஜெட்டில் வாங்கிகொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
22 Percent Discount on Motorola Edge 40 With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X