Home
Mobile

முரட்டு டிஸ்கவுண்ட்.. அடிமட்ட ரேட்டில் 6000mAh பேட்டரி.. OIS கேமரா.. 30W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

மோட்டோ போனை பட்ஜெட்டில் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்கள் பிளிப்கார்ட் டிஸ்கவுண்ட்டில் (Flipkart Discount) கிடைக்கும் மோட்டோ ஜி64 5ஜி (Moto G64 5G) மாடலை ஆப்ஷனில் எடுங்கள். வெறும் ரூ.12,000 பட்ஜெட்டில் ஓஐஎஸ் கேமரா, 6000mAh பேட்டரி, 30W ஃபாஸ்ட் சார்ஜிங், ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே போன்ற நம்ப முடியாத பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஜி64 போனுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் விவரங்களை பார்ப்பதற்கு முன்பாக பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த மோட்டோவை முரட்டு மாடல்னு கூட சொல்லலாம். இந்த பட்ஜெட்டிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சனை கொடுக்கிறது. அதேபோல 6000mAh பெரிய பேட்டரி சிஸ்டம் வருகிறது. குவாட் பிக்சல் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், பட்ஜெட்டுக்கு ஏற்றது.

முரட்டு டிஸ்கவுண்ட்.. அடிமட்ட ரேட்டில் 6000mAh பேட்டரி.. OIS கேமரா!

மோட்டோ ஜி64 5ஜி அம்சங்கள் (Moto G64 5G Specifications): இந்த மோட்டோவில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்கிரேட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. மேலும், மை யுஎக்ஸ் (My UX) கொண்ட 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 (6nm Octa Core MediaTek Dimensity 7025) சிப்செட் கிடைக்கிறது.

டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் எதிர்பார்க்கலாம். 6.5 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இதுபோக இந்த டிஸ்பிளேவில் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு மாலி அல்லது அட்ரினோ கிடையாது.

இந்த மோட்டோ ஜி64 5ஜி போனில் ஜிபியு ஐஎம்எக்ஸ் பிஎக்ஸ்எம் 8 256 (GPU IMG BXM 8 256) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வருகிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரியும் இருக்கிறது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் கொடுக்கும் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் 1080p வீடியோ ஷூட் மற்றும் குவாட் பிக்சல் டெக்னாலஜி வருகிறது. இதே 1080p வீடியோ ஷூட்டிங்குடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

ஆடியோ பீச்சர்களை பொறுத்தவரையில், 3.5எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) இருக்கிறது. டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஜி64 போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) உள்ளது.

இப்போது பேட்டரி பீச்சருக்கு வருவோம். 30W டர்போ சார்ஜிங் (Turbo Charging) மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. IP52 ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, 192 கிராம் எடை வருகிறது. 5ஜி எஸ்ஏ (5G SA) கனெக்விட்டியும், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) உள்ளது.

இந்த மோட்டோ போனில் மூன்று கலர்கள் அதாவது மின்ட் கிரீன், ஐஸ் லைலாக் மற்றும் பேர்ல் ப்ளூ ஆகியவற்றில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த மோட்டோ போன் வெளியானபோது, 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.14,999ஆக இருந்தது. இப்போது, ரூ.13,999-க்கு கிடைக்கிறது. ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.12,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
22 Percent Discount on Moto G64 5G With 8GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X